பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் iQ1 சசி இந்தக் கொலைப் பாதகனை அப்பால் இழுத்துக் கொண்டு போங்கள். ஸ்வாமி இந்தப் பரம பாதகனை ஏன் காப் பாற்ற வேண்டும் - ஜனங்களே! இவனைக் கட்டி யானைக் காலில் உருட்டி விடுங்கள். இல்லாவிட்டால் வாளால் இவன் தேகத்தை இரண்டாய்ப் பிளவுங்கள். இவன் உயிருடன் இருந் தால், எத்தனையோ ஏழை ஜனங்களை வயிறெரியச் செய்வான். மாத பொறுங்கள் பொறுங்கள் நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள். வீர நற்குணமே நிறைந்த உத்தமரே! உம்மையே அடைக் கலமாய் நம்பி வந்தேன். என் உயிரைக் காப்பாற்றும். இனி உமக்கு நான் யாதொரு தீங்கும் நினைப்பதே இல்லை. ஜனங்கள் : இவனைக் கொல்லுங்க; மகா பாவியாகிய இவனை உயிருடன் விடக்கூடாது. (மாதவராயருடைய கழுத்தில் இருந்த எருக்க மாலையை வளயத்தலேனை கழற்றி விரசேனனுடைய கழுத்தில் போடு கிறாள்) - வீர ; ஹா வஸந்தஸேனை பெண்மயிலே! என் பேரில் இரக்கம் கொள். இனி நான் உன்னை நினைப்பதே இல்லை. சசி இவனை உயிருடன் விட்டால் நகரத்திற்குப் பெரிதும் துன்பம் உண்டாகும். இன்னம் யாருக்கு இவன் எவ்விதத் தீமை செய்வானோ இவனுடைய உயிரை வாங்குங்கள். மாத ஐயா! இப்படி வாரும் சொல்வதைக் கேட்பீரா? சசி ஆட்சேபனை என்ன? - மாத அப்படியானால் இவனை விட்டு விடுங்கள். சசி: நல்ல காரியம்; வஸந்தஸேனையை கொல்ல நினைத் தும் அல்லாமல் உங்களுடைய உயிருக்கும் உலை வைத்தானே! இந்தப் படுபாவியையா உயிருடன் விடுகிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/193&oldid=887506" இலிருந்து மீள்விக்கப்பட்டது