பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் யும் வராதே. ஆகையால் வைசியர் பேரில் எந்த ஸ்திரீ ஆசை வைப்பாள்! மல்லி : அப்படியானால் உங்கள் காதலர் பிராம்மணரும் அல்ல, rத்திரியருமல்ல, வைசியருமல்ல, வேறு யார்? வஸ் அடி மல்லிகா நீ ஒன்றையும் அறியாதவளைப் போல மிகவும் அவசரமாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகிறாயே! நாம் இரண்டொரு மாசத்திற்கு முன் ஸ்வாமி கோவிலுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த ஒருவரைப் பார்த்து அவர் யாரென்று நான் உன்னைக் கேட்டதை மறந்து விட்டாயா? மல்லி ஓகோ அப்படியா? அறிந்து கொண்டேன்! அறிந்து கொண்டேன்! நேற்றிரவு நீங்கள் ஒளிந்து கொண்டதாகச் சொன் னர்களே. அது அவருடைய மாளிகை அல்லவோ? ஆனால் அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாய் ஜனங்கள் சொல்லிக் கொள்கிறார்களே அவர் பேரிலா இச்சை கொண்டீர்கள்? வஸ்: (எந்துகுவாடலகிநாடு’ என்ற பாட்டின் வர்ண மெட்டு) தோடி - ரூபகம் ப. ஸுந்தரனால் எனதுமேனி சோர்ந்ததேவாடி அ. இந்து வதனங் கினிமை காண - எந்தமாது மாசைமீற வந்து பாதம் போற்றிடுவாள் (ஸ்) ச. எந்த நாளும் நிறையில்மீறா நீர்மையும் நலமும் சொந்தமான தனமேயாக - லகமோ செல்வமே! மனத்தின் பெருமை பணத்திற் காமோ! மாரன்வாம மேனிகாணத் தீமையாரு நீங்கியோடும் (ஸ9) அவர் தனத்தில் ஏழையாய் இருந்த போதிலும் குணத்தில் அவரைவிட மேலான தனிகர் உண்டோ? கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்பார்களே. அதற்கு இணங்க அவருடைய அழகு கண்கொள்ளா காட்சி அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/62&oldid=887611" இலிருந்து மீள்விக்கப்பட்டது