பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 65 வஸ் சரி உண்மைதான்; அது போகட்டும்; உமது கடன் காரன் பெயரைச் சொல்லும். மகி நான் மாதவராயப் பிரபுவின் வேலைக்காரனாய் இருந்தேன். அவர் ஏழ்மைத் தனம் அடைந்த பிறகு நானும் அவருக்குப் பாரமாய் இருக்கக் கூடாதென்று நினைத்து, அவரை விட்டு வந்து விட நேர்ந்தது. பிழைக்க வழி வேறு இல்லாமை யால் நான் சூதாட ஆரம்பித்தேன். அதில் 10-ரூபாய் தோற்றேன். /வெளியில் இரண்டு சூதாடிகளும் கதவை இடிக்கிறார்கள்) மகி (திடுக்கிட்டு) ஆகா! அவர்கள் வந்து விட்டாற் போல் இருக்கிறதே! ஐயோ என்ன செய்யப் போகிறேன். வஸ் அடி மல்லிகா இதோ இந்தக் காப்பை எடுத்துக் கொண்டு போய் 10-ரூபாய்க்குப் பதிலாய்க் கொடுத்து விட்டு வா. இவரே கொடுத்ததாகத் தெரிவி. மல்லி ஏனையா உமது கடன்காரன் பெயரென்ன? மகி அவன் பெயர் முண்டன். (உடனே மல்லிகா வெளியிற் போய்க் கதவைத் திறக் கிறாள்.) - முண் அடே ஆரோ கதவெத் தொறக்கிறாடா! திண் அவன் எங்கிட்டோ போயி நொளஞ்சிட்டாண்டா இன்னமேலே நம்ம கையிலே சிக்க மாட்டாண்டா போவோம்டா மல்லி : யார் நீங்கள்? கதவை இப்படித் தானா இடிக்கிறது! இரண்டு பேரில் முண்டன் யார்? திண் அடே அண்ணே இவ எம்பிட்டு அளவாக்கிறாடா! ஒன்னெத்தாண்டா கேக்கறா! முண் முண்டனே நீ என்னாத்துக்கு தேட்றே? அவுனுக்கு நொம்ப வருசத்துக்கு மின்னெயே கண்ணாளம் ஆயிப் போச்சே! வ.கோ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/67&oldid=887621" இலிருந்து மீள்விக்கப்பட்டது