பக்கம்:வரதன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வரதன் இளைத்துக் களைத்துத் தலைவிரிகோலமாய்க் கூடத்தில் விழுந்து கிடந்தாள். அவளைச் சுற்றி இரண்டு மூன்று கிழவிகளும், நாலைந்து இளம் பெண்களும், தம் முகவாய்க் கட்டையில் கையை வைத்து ஊன்றிக்கொண்டும், கடவுளை வேண்டிக்கொண்டும் இருந்தனர். தரையில் கிடந்த குமுதவல்லி, சிறிதுநேரம் பொறுத்து மெல்லக் கண்திறந்து பார்த்தாள். அப் போது, அங்குள்ள கிழவிகளுள் ஒருத்தி, அம்மா, நீ இப்படியே அழுதுகொண்டிருப்பதால் என்ன பயன் ? எழுந்திரு : பல் துலக்கிக்கொண்டு ஏதேனும் சிறிது சாப்பிடு; உன் மகன் வருவான் ; எங்கே போகின்ருன் ? என்ருள். மகன் என்ற சொல்லேக் கேட்டதும், குமுத வல்லிக்கு மறுபடியும் அழுகையும் துக்கமும் வந்துவிட் டன. ஆ என் மகனே-மகனே !' என்பாள்; நான் உன்னை எப்போதடா பார்க்கப்போகின்றேன்’ என்பாள் ; ஐயோ ! என் உயிர் இன்னமும் போகவில்லையே என்பாள் ; அந்தப் பாவி எமன் எங்கே போய்விட்டான்? என்பர்ள் நேற்று இந்நேரம் பாடசாலைக்குச் சென் ருயே என்பாள் ; நீ இல்லாமல் இவ்வீடு சந்தடி யற்றுக் கிடக்கின்றதே !’ என்பாள் ; அயல்வீட்டுப் பிள்ளைகளைப் பார்த்துப் பார்த்து அழுவாள் ; கைகளைத் தரையில் மோதுவாள் ; கடவு ேள, உனக்குக் கருணை யில்லேயா ? என்பாள் ; கோவிந்தா-கோபாலா, உன்னையே நம்பினேன் என்பாள் ; மறுபடியும் ஏங்கி இளேத்து நிலத்தில் விழுவாள். H இவள் இவ்விதம் அழுதுகொண்டிருக்கும்போது தெருவில் யா தோ ஒரு வண்டிவரும் சத்தம் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/71&oldid=891214" இலிருந்து மீள்விக்கப்பட்டது