பக்கம்:வரதன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் ஆரவாரம் 67 ஏற்றிவைத்தாள். பிறகு ஒரு தாமிரத்தட்டில் தண்ணி ரூற்றி, அதில் அரைத்த மஞ்சளும், சுண்ணமும் கலந்தாள்: ஒரு வெற்றிலையை அத்தட்டின் இடையே வைத்தாள்: அதன்மேல் ஒரு பெரிய கரும்பூரக் கட்டியை ஏற்றி வைத்து அவனுக்கு ஆரத்தி எடுத்தாள். அப்போது, கண்ணனும் முருகனும், வரதன் பக்கத்தில் உட்கார்ந்து, தாங்களும் திருஷ்டி கழித்துக்கொண்டனர். பிறகு, அங்கிருந்த ப்ெண்களில் ஒருத்தி, வரத னுக்கு அருகே வந்து, அப்பா, எங்கள் வயிற்றில் பாலைவார்த்தாயே ?’ என்று சொல்லித் தன் இரண்டு கைகளாலும் அவன் தாடையைத் தடவித் தடவித் தன் கன்னத்தில் வைத்து கட்டை யுடைத்துக் கொண் டாள்.

  • மகனே ! உனக்காக நாங்கள் எத்தனைத் தெய் வங்களை வேண்டிக்கொண்டோம் என்ருள் மற் ருெருத்தி.

குமுதவல்லிக்கு அப்போதுதான் மனம் குளிர்ந்தது : அவளும் வீட்டு வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள். கண்ணனும் முருகனும் வரதனிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். கந்தன், சுந்தரன், தாமோதரப்பிள்ளை முதலியவர் கள் தெருத்திண்ணையில் அமர்ந்து தலைமை ஆசிரியரது நற்குணத்தினை விளக்குதற்குப் பலப்பல சம்பவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். வரதன் விடுவந்து சேர்ந்ததைப் பிள்ளைகள் எவ் விதமோ அறிந்துகொண்டனர். ஆதலால், அவர்கள் அப்போதே சென்று வரதனைக் காண விரும்பினர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/74&oldid=891222" இலிருந்து மீள்விக்கப்பட்டது