பக்கம்:வரதன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதனைக் கண்டறிந்த வரலாறு 7/ף கும் சமயமாய் இருந்ததால், அவர்களுள் அநேகர் அப் பொழுது விழித்துக் கொண்டனர். கம் ஆ சி ரி ய ர், அவர்களுள் இரண்டொருவரிடம் வரதனைக் குறித்து விசாரித்தார். அவற்கு அவர்களில் ஒருவன், சுமார் இரவு பத்துமணிக்கு அந்த வீதியில் ஓர் இருண்ட இடத்தில், ஒரு வாலிபன், பட்டணத்திலிருந்து ஒரு சிறுவனை எவ்வி தமோ அழைத்து வந்து, அவன் அணிந்திருந்த நகை களைக் கழற்றிக் கொண்டு, அவனைக் கொல்லவும் முயன்றதாகவும், அப்போது புழல் கிராமத்திலுள்ள இரண்டு பெரியோர்கள் அவ்வழியே வந்ததாகவும், அவர் களைக் கண்டு அவ்வாலிபன் எங்கோ ஓடிவிட்டதாக வும், ஆதலால் அவர்கள், அச்சிறுவனைத் தாங்கள் வீட் டுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினன். 'இதைக் கேட்டதும் காங்கள் திடுக்கிட்டோம். அச் சிறுவனது அங்க அடையாளங்களை விசாரித்த போது, அவன் வரதனே என்பதை நாங்கள் நன்ருக அறிந்துகொண்டு அப்போதே புழல் கிராமத்திற்குச் சென் ருேம். அங்கே சென்றதும் நாங்கள், அங்குள்ளோரின் உதவியால் வரதன் தங்கியிருந்த வீட்டை யடைந்தோம். வரதன், அப்போது நல்ல நித்திரையில் இருந்தான். விட் டிற்குடையவர், அச்சிறுவன் மிகவும் களைத்திருக்கின் ருன் என்றும், அவன் இன்னும் சிறிது நேரம் உறங்குதல் கலம் எனவும் கூறினர். 'ஆதலால் நாங்கள் அங்கிருந்து வண்டி கட்டிக் கொண்டு புறப்படுவதற்கு மணி ஏறக்குறைய எட்டாகி விட்டது. நாங்கள் அவ்விதம் புறப்பட்டு வியாசர்பாடிக்கு அருகே வரும்போதுதான் மாமாவையும், அண்டை வீட் டுத் தாத்தாவையும் கண்டோம்' என்று சுந்தரன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/84&oldid=891242" இலிருந்து மீள்விக்கப்பட்டது