பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் பம் வருகிறபோது நான் உங்களையும் இங்கே அழைத்துக் கொள்வேன்' என்று எனக்கு எழுதினார். நான் வெகு சீக்கிரமாகவே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வீட்டில் எனக்குக் குறை எதுவும் இருந்ததில்லை. ஆனாலும், வேலையை விட்டுவிட்டு, வெட்டித்தன மாகக் கண்ட கண்ட புத்தகங்களை படித்தும், வெள்ளைத் தாள்களை கரியாக்கிக் கொண்டும்’ வீட்டுக்குப் பாரமாக இருப்பது சரிப்பட்டு வராது என்று என் மனம் உறுத்தியவாறு இருந்தது. "பார்த்த வேலையை விட்டுப் போட்டு இப்படி இருக்கானே! இவன் என்ன செய்யப் போறானாம்? என்று என் அம்மா குறை கூறிப் புலம்புவது உண்டு. ஆனால், என் அண்ணா அசோகன் (ரா. சு. கோமதி நாயகம்) எனது விருப்பப்படி நான் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதற்கு உதவியே செய்தார். புத்தகங்களும் பத்திரிகைகளும் கொண்டு தந்தார். அப்போது திருநெல்வேலி டவுன் மெடிகல் ஸ்டோசில் அவர் வேலை பார்த்து வந்தார். நான் அதிகம் படிக்க ஆசைப்பட்டேன். பள்ளிக் கூடத்தில் நான் படித்தது எஸ். எஸ். எல். சி. முடிய மேல் படிப்புக்கு வசதி இல்லாததால் காலேஜில் அடி எடுத்து வைக்கவில்லை. கல்விப் பயிற்சிக்கும், ஒழுக்கத்துக்கும் கட்டுப் பாட்டுக்கும் சிறந்த கல்வி நிறுவனம் எனப் பெயர் ஹைஸ்கூலில்தான் நான் 5-ம் வகுப்பு முதல் எஸ். எஸ். எல். சி. முடியப் பயின்றேன். 1986 மார்ச் மாதத்துடன் எனது பள்ளிப் படிப்பு முடிந்தது.