பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ே வல்லிக்கண்ணனின் போராட்ட ங்கள் தத்தன. தமிழகத்தில் திறமைக்கு உரிய கவனிப்பையும் மதிப்பையும் பெறாமல் போன அந்த எழுத்தாள நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் 7 smrti esol – išg Tíř. ‘un-honoured, unwept and unsung ஆக மறைந்து போன எத்தனையோ மனிதர்களில் அவரும் ஒருவர். . . . . 'கிராம ஊழியன் நல்ல மொழிபெயர்ப்புக் கதை களையும் பிரசுரித்தது. வில்லியம் சரோயன், செக்காவ், மாப்பசான், மற்றும் சிறந்த சிறுகதை ஆசிரியர்களின் கதைகளை அசோகன் தமிழாக்கி வந்தார். - சில புதிய எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டிருந் தார்கள். அவர்களில் பராங்குசம் (கே. பி. ரங்காச்சாரி) முக்கியமானவர். - 1930களின் பிற்பகுதியில் தேவேந்திரநாத் சத்யார்த்தி என்பவர் வட இந்தியாவிலிருந்து ஊர் ஊராகச் சென்று நாடோடிப் பாடல்களை சேகரம் செய்து, அவை பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்தார். . - அவர் வந்து போனதன் விளைவாக, தமிழ் நாட்டி லும் நாடோடிப் பாடல்களை சேகரிக்க வேண்டும் என்ற விழிப்பு பத்திரிகை உலகில் ஏற்பட்டது. சில எழுத்தாளர்கள் நாட்டுப் பாடல்கள் சேகரிப்பதிலும், அவை பற்றி எழுதுவதிலும் ஆர்வம் கொண்டனர். அத்தகைய தொகுப்பு நூல்களும் வந்தன. ‘. . ..., மக்கள் மத்தியில் உயிருடன் வாழ்ந்த கதைகளை யும் திரட்ட வேண்டும்; அவற்றுக்கு எழுத்து உருவம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம்,