பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வல்லிக்கண்ணனின் போராட்ட்ங்க்ள் 1947 மே மாதம் கிராம ஊழியன் கடைசி இதழ் பிரசுரமாயிற்று. அதுதான் கடைசி இதழ் என்று அறிவிக்கப்பட வில்லை. தமிழ் பத்திரிக்கை உலக மரபுப்படி, பெரி தாக அளக்கும் விளம்பர அறிவிப்பு அந்த இதழில் இடம் பெற்றது. கிராம ஊழியன் வளர்ச்சியைக் கருதி, பத்திரிகையை திருச்சி நகருக்கு மாற்றுகிற திட்டம் இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக சிறிது காலம் பத்திரிகை நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், மீண்டும் சிறப்பான முறையில் பத்திரிகை வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஊழியனில் நான் எழுதி வந்த விடியவில்லை!" என்ற புதுமையான, சுவாரஸ்யமான, நையாண்டியும் சிந்தனைக்கருத்துகளும் நிறைந்த நாவல் தொடர் கதையாக வந்து கொண்டிருந்தது. அது பற்றி முழுப் பக்க தனி அறிவிப்பும் இருந்தது. 'வல்லிக்கண்ணன் எழுதும் ‘விடியவில்லை 1: இன்னும் முடியவில்லை. இந்த நாவல் விரைவில் புத்தகமாக வெளிவரும் என்றும் விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. "கிராம ஊழியன்’ திருச்சியிலிருந்து வெளிவரவு மில்லை. விடியவில்லை’ நாவலை நான் எழுதி முடிக்கவுமில்லை; அது புத்தகமாக வரவும் இல்லை. புத்தகப் பிரசுரம் புத்தக வெளியீடு சம்பந்தமாக நான் ஆரம்ப காலம் முதலே பெரும் கனவுகள் கண்டு கொண்டிருந் தேன்.