பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் முதல் 'அட்வென்ச்சர்’! பத்திரிகை உலகில் முன்னேறுவதற்கும், எழுத் தாளனாக மேலும் வளர்ச்சி பெறுவதற்கும், சென்னை போயாக வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். 1942ல். அப்போது நான் திருநெல்வேவியில் இருந்தேன். பிறருடைய நோக்கில், வேலை எதுவும் செய்யாமல்.’ உறவினர் ஒருவர் பெரிதும் முயன்று எனக்கு வாங்கித் தந்திருந்த சர்க்கார் விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீஸ் கிளார்க் வேலையை,நான்கு வருட சர்வீசுடன், ராஜிநாமா செய்துவிட்ட வீணன்' ஆக ‘இவன் எங்கே உருப்படப் போறான்! போயும் போயும் இவனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத் தேனே! என்று அந்த உறவினர் அலுத்து வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்கள் வரை.