பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 406 `ಿಡ್ಗಿಳ್ದ பெருமைதான் ஏது? பருவதம் அல்லவா கவனிப்புக்கு மேல் கவனிப்பு பெறுவாள். இனி அவள் ஆடினாலும் ஆடாவிட்டாலும், இந்த ஊரிலே உள்ளவங்க அவளுக்கு சாமி வந்த புரவோலத்தைப் பெரிசாகச் சொல்லிக்கிட்டு இருப்பாங்களே. என் பிழைப்பிலே ஈர மண்ணை அள்ளிப் போட்டாளே அந்த முண்டை ' என்று முணங்கிக் கொண்டிருந்தாள் ஆவு ஆச்சி. அவள் மேலும் அந்த ஊரிலேயே தங்கிப் பலரது அனுதாபங்களையும் பேச்சுகளையும் பெற விரும்பவில்லை. 'காசி ராமேஸ்வரம் என்று போய் புண்ணியம் தேடணும்' எனச் சொல்லிவிட்டுப் போனவள் போனவளே! அவள் என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள்; அல்லது செத்தே போனாளா என்கிற விஷயம் எதுவும் அவ்வூராருக்குத் தெரியாமலே போயிற்று. - அவள் வீடு இடிந்து விழுந்து கட்டமண்ணாக நிற்கிறது. அவளது நிலம் உழுது பயிரிடுவோர் இல்லாத புறம்போக்காய் கிடக்கிறது. ஆவு ஆச்சியின் நினைவுச் சின்னங்களாக விளங்குகின்றன. இவை. క్ల్వే