பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றியின் தோல்வி & 164 இடத்திலேயே இல்லாததுபோன்ற ஒரு உணர்ச்சியும் என்னைப் பற்றிக் கொண்டது. இப்போது நான் சூரியனைக் காணவில்லை. காலநதியின் கரையிலே சிதைவுற்றுக் கிடந்த நாகரிககலாசார மிச்ச சொச் சங்களின் மத்தியில் நான் நிற்கவுமில்லை. ஆனால், அந்த நாகரிக-கலாசார புண்ணிய நகரம் எனது கண் முன்னாலேயே தீபட்டுக் கருகிப் புதைந்தும், இடியுண்டு சரிந்தும் நாசமாகிக் கொண்டிருக்கக் கண்டேன். எத்தகைய கோரமான காட்சி அது எவ்விதக் கொடிய சோக நாடகம் அது! - - எல்லையில்லாக் காலப் பெருவெளியிலே எரிபட்டு அழிந்த நகரங்கள், இடியுண்டு சிதைந்த இடங்கள், கடல் கொண்டு மறைந்த பிரதேசங்கள், மனித வெறியால் அடிமாண்டு போன நாடுகள் எத்தனை எத்தனையோ! அவற்றிலே இது எதுவோ? இதற்கு ஏன் இந்த விதியோ?இந்த நினைப்பு என் மனதில் கிளர்ந்து எழுந்ததுதான் தாமதம் எனக்குப் பழக்கப்பட்டுவிட்ட அந்தச் சிரிப்பு எனது காதருகே-மிக மிக அருகிலே-ஒலிக்க-மிகவும் தெளிவாக ஒலி செய்யக் கேட்டேன். உடம்பைத் தொட்டு உட்பாய்ந்து எலும்புக் குருத்துவரையில் சில்லிட வைக்கும் குளிர் பனிக்காற்று என்னைத் தாக்கிவிட்டதுபோல் தோன்றியது. என் தேகம் நடுக்கம் கொடுத்தது. "பயமோ"-கேலி செய்யும் அதே குரல். "ஊகங்" என்று தலையை ஆட்டினேன். "நீ எங்கேயோ பார்க்கிறாயே! நடப்பதைக் கவனி" என்றது அந்த ஒலி, மீண்டும் என்னை யாரோ வேறு எங்கோ கொண்டு போய்ச் சேர்த்ததாகத் தோன்றியது. வேறு எந்தக் காலகட்டத்திலோ நான் தலை தூக்கி நின்று வேடிக்கை பார்ப்பதுபோல், எனது உணர்வுக்குத் தோன்றியது. காலக்