பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

థ Žo 166 வெற்றியின் தோல்வி: நலம் விரும்பினான். நாட்டினர் அவனைப் போற்றினர். புகழ்ந்தனர். அவனது வாழ்க்கை உயர்வு அவள் உள்ளத்திலே தீ மூட்டியது. அவனுடைய புகழும், வளர்ச்சியும் அவள் வயிற்றில் அணையாப் பெருந் தீயாய் எரிந்தது. நெஞ்சில் கடும் நெருப்பாய் கனன்றது. அவன் இளமையும், வலிமையும் எழிலும் அவள் உடலின் உணர்ச்சித் தீயைப் பெரிதும் வளர்த்தது. இரை வஞ்சிக்கப்பட்ட பெண் புலிபோல் குமைந்து, கொதிப்புடன் வாழ்ந்து வந்தாள் அவள். அவன் புகழில் பொறாமை கொண்ட அயலான் ஒருவன் அவள் கவனத்தைக் கவர்ந்தான். அண்டை நாட்டினனைத் தனது கருவியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டாள் அந்த சரசவல்லி. அயலான் உள்ளத்தில் பொங்கிய காதலையும் பொறாமையையும் சேர்த்து வளர்க்கும் நெய்யாக மாற்றினாள் அவ்வழகி. தனது கருத்துக்கு அவனைத் திருப்பி, தன் இஷ்டம் போல் செயல்புரியும்படி ஆட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அவள் நடந்துகொண்டாள். கிளர்ந்தெழுந்த அவன் உணர்வுப் பசிக்கு உரிய தீனி கொடுக்காமல்-அதே வேளையில் அவன் பசியை அதிகப்படுத்தும்படி ஆசை காட்டிப் பழகினாள் அவள். வேளை வந்து விட்டது என உணர்ந்ததும், அவனை செயலுக்கு ஏவினாள். 'உன்மீது அடக்க முடியாத காதல் கொண்டுவிட்டேன். காதலுக்காக நான் உயிரையும் கொடுக்கத் தயார் என்று புலம்பிக் கொண்டிருந்தான் அவ்வீரன். 'உன் உயிர் உன்னிடமே இருக்கட்டும். என் காதலுக்குப் பரிசாக அந்த அழகு நகரை நாசப்படுத்தி, அதன் காவலனைக் கொன்று விட்டுவா. அப்பொழுதுதான் எனக்குத் திருப்தி பிறக்கும். அதன் பிறகு என்னையே நான் உனக்குத் தந்து விடுவேன்' என்று பசப்பினாள் அவள், :: -