பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

袋 i 75 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | தோண்டி அதைப் புதைத்து நன்றாக மண்போட்டு ಕ್ರಿಟ್ಟ. விட்டானே! என்று. பிறகு ஏன் மாமா இப்ப அந்தப் பூனையைப் பற்றி விசாரிக்கிறீர்கள்? போன வெள்ளிக் கிழமை தான் அது செத்துப்போச்சு என்ற ஞாபகம் உங்களுக்கு வந்ததோ? என்று கேட்டான். 'இல்லை என்று முனங்கினார் பெரியவர். தோட்டத்திலே புதுசாக் கறுப்புப் பூனை ஏதாவது வந்திருக்கும் போலிருக்கு என்றார். 'பூனையா? புதுசாகவா? கறுப்புப் பூனையா? ஹெஹ. இந்த வட்டாரத்திலேயே வேறே கறுப்புப் பூனை கிடையாது மாமா, மஞ்சள் படிந்த கண்கள். உடல் பூராவும் கறுப்பு மயிர் வாயைச் சுற்றிலும், அடி வயிற்றிலும், வால் நுனியிலும் திட்டு திட்டாக வெள்ளை நிறம்-அதுமாதிரி ஒரு கடுவன் பூனை நம்ம வீட்டுப் பக்கத்திலேதான் சுற்றிச் சுற்றி அலைந்தது, வேறே கறுப்புப் பூனையே கிடையாது. கைலாசம் பிள்ளை ஒன்றுமே பேசவில்லை. மறுபடியும் சிவசைலமே ஆரம்பித்தான்; அப்படியே பூனை ஏதாவது வந்திருந்தால் அது எனக்குத் தெரியாமலா போகும்? இந்த வட்டாரத்தில் வசிக்கிற பூனைகள், நாய்கள், குழந்தைகள் எல்லாம் எங்கெங்கே உள்ளவை, எப்படி எப்படி அலைகின்றன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.' இந்த ஊரில் உள்ள இளம்பெண்களில் யார் எந்த வீட்டைச் சேர்ந்தவள், எவள் எந்தத் தெருவில் வசிக்கிறவள் என்பது கூடத்தான் உனக்குத் தெரியும். இது மாதிரி விஷயங்களில் நீ பெரிய துப்பறியும் புலி இல்லையா! என்றார் பிள்ளை. வழக்கம் போல் கெண்டை பண்ணித் தன்னைச் சுதாரித்துக் கொள்ள அவர் செய்த முயற்சி அது ஆனால் அவர் குரலில் சுரத்து இல்லை. - மாமாவின் இந்த ரகமான நொடிப்பும் நையாண்டியும் மருமகனுக்கு என்றுமே பிடிக்காது. அவனுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.