பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 & வல்லிக்கண்ணனின் மணியின் கதைகள் அவன் செயல்களைக் கவனித்தபடியிருந்த பிள்ளை 'மாடசாமி என்று குரல் கொடுத்தார். 'எசமான் என உச்சரித்து, கைகளைத் தேய்த்தபடி, கைலாசம் பிள்ளையின் முன்னால் நின்றான் அவன். இங்கே ஒரு கறுப்புப் பூனை இருந்துதே' 'அதுதான் செத்துப் போச்சுதே, எசமான்' என்று சொன்னான் அவன். 'உம்ம்' என்று முனங்கினார் பெரியவர். 'எசமான் உத்தரவு இட்டபடி சின்ன ஐயாவும் நானுமாச் சேர்ந்து அவரைக் குழியில் புதைத்துப் போட்டோமே அதோ அங்கே, அந்தச் செடிகளுக்கு மத்தியிலே’ என்று கூறி, மாடசாமி கை நீட்டி ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான். அவன் கை நீண்ட வழியே சென்றன. அவருடைய கால்கள். முன்பு பூனை நின்றதைக் கண்டதாக உணர்ந்த இடம்தன் அது. பிள்ளையின் தேகம் தானாகவே நடுக்கம் கொடுத்தது. 'சரி சரி.! உன் வேலையைக் கவனி போ' என்று சிடுசிடுத்தார் பிள்ளை. 'எசமான் அநாவசியமாகக் கோபிக்கிறாரு என்று எண்ணினான் மாடசாமி! அவர் குணமே அப்படித்தான். முன்கோபம் ஜாஸ்தி என்று தனக்குத்தானே சமாதானமும் கூறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். பூனை செத்துப்போச்சு சரி, நான் வேணுமென்றா அதை அடித்துக் கொன்றேன்! என்று தினக்குரல் எழுப்பியது உள்ளம். பூனையை அவர் வேண்டுமென்றே கொல்லவில்லை தான். கைலாசம் பிள்ளை நன்றாகதுரங்கிக்கொண்டிருந்தார்