பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 & |வல்லிக்கண்ணனின் கணியான கதைகள் | பூனையைத் துரத்தி விளையாடிக்கொண்டிருந்தது. கறுப்பு ஆண், மற்றது பெண். அநேக தடவைகள் இரண்டும் நடு இரவில் பேய்க் கூப்பாடு போட்டு, விளையாடுவதன் மூலம் ஊரையே எழுப்பியிருக்கின்றன. அது போன்ற சந்தர்ப்பங்களில் கைலாசம் பிள்ளைக்கு எழுந்த ஆங்காரத்தை அளவிடவே முடியாது. பிசாசுப்பயல் பூனை என்றைக்காவது அதை அடிச்சுக் கொல்லத்தான் போகிறேன். பூனையாகவா வருது அது? சனியன். மனுசனைத் துரங்கவிடாமல் இப்படிச் கத்திக்கொண்டு. என்று முணமுணப்பார். அந்தப் பூனையும் அவர் கைக்குள் சிக்காமல் ஓடி விடையாடித் தப்பித்து தொல்லை கொடுத்துக்கொண்டுதாணிருந்தது. வெள்ளிக்கிழமை சாயங்காலம், கைலாசம் பிள்ளை துரங்குகிறார் என்று கொஞ்சமேனும் அச்சமோ கூச்சமோ இல்லாமல் இரண்டு பூனைகளும் சுற்றிக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்தி அமர்க்களப்படுத்தி மகிழ்ந்தன. வெள்ளைப் பூனை பிள்ளையின் தலை ஒரமாக நடந்து சென்றது. அதைத் துரத்தி வந்த கறுப்புப் பூனை, காதை அறுக்கும் கூச்சல் ஒன்று எழுப்பியவாறு ஓடி வந்தது. பிள்ளையைத் தாண்டிக் குதித்தது. அவர் திடுக்கிட்டு விழித்து அலறி அடித்து எழுந்து உட்கார்ந்தார் அவருடைய தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தினாலும் கோபத்தினாலும் கலங்கிப்போன கண்கள் ஜிவுஜிவென்று தணல் மாதிரி ஜொலித்தன. ಅಥ್ರ போன்ற சமயத்தில் அவர் முகத்தை எந்தக் குழந்தையாவது பார்க்க நேரிட்டால் அது பயந்து அலறாமல் இருக்க முடியாது. கோபமும் கொதிப்பும் பிடித்து ஆட்டுகிறபோது பிள்ளையின் முகம் பயங்கரமாக மாறிவிடும், விகாரமாகவும் தோன்றும். சுழன்று புரண்ட் அவரது சிவந்தவிழிகள் பூனையைப் பார்த்த வேகத்திலேயே கட்டிலின் பக்கத்தில் சுவர்களின் மூலையில் சாய்த்து வைக்கபட்டிருந்த தடியையும் பார்த்தன. அவர் கை அதை வேகமாகப்பற்றி எடுத்துச்சுழற்றி விசி