பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 婷 ج: م3 بمبیی هاه * a வல்விக்கண்ணனின் மணியான கதைகள் பெரிய பிள்ளைக்கு விஷயம் விளங்காமல் இல்லை. இருந்தாலும், என்னடா உளறுகிறே? என்று சொல்லி வைத்தார். மனக் குறு குறுப்பை அப்படியாவது அமுக்கிவிடமுடியாதா என்ற ஏக்கத்தில் பிறந்த எரிச்சல் அது. "பூனை செத்துப் போச்சு, மாமா. அந்தக் கறுப்புப் பூனை.' போடா போடா! பூனையாவது சாகிறதாவது ஒரு பூனைக்கு ஒன்பது உசிரு என்பாக. எமனுக்கே கடுக்கா கொடுத்துவிடுகிற பிாரணி பூனை தெரியுமா?, என்றார் பிள்ளை. 'இருக்கலாம், மாமா. கொள்ளிக்கட்டையினாலும் விறகுக் கட்டையினாலேயும் அடிபட்டுச் செத்துப்போன பூனைகளை நான் பார்த்திருக்கிறேன். அது ஏன்! இப்ப இந்தப் பூனை செத்துக்கிடக்குதே, அதுக்கு என்ன சொல்றீங்க? வேணுமின்னா அதை எடுத்துக்கொண்டு வந்து காட்டுகிறேன். இதோ போயி வாலைப் பிடிச்சுத் தூக்கிவாறேன்? என்று கிளம்பினான் சிவசைலம். 'ஏய் ஏய், அது ஒண்னும் வேண்டாம் என்று கத்தினார் பிள்ளை. நெசமாவே செத்துப்போச்சா அது? என்று துக்கம் விசாரித்தர். ஆமா, அதோ அங்கே செடிகளின் நடுவிலே விழுந்து கிடக்குது.' . . பெரிய பிள்ளை தனது மனச்சுமையை உஷ்ணக் காற்றாக வெளியேற்றிவிட முயல்வது போல் நீண்ட பெருமூச்சு எறிந்தார். 'உம். ஆளைக் கூப்பிட்டு குழிதோண்டச் சொல்லு. அதை மண்ணிலே போட்டு மூடச்சொல்லு போ' என்று உத்தரவிட்டார். சரிதான், மாமா என்று சொல்லிப் போய் விட்டான் அருமை மருமகன்.