பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மினுக்குட்_ & 18 'ஊகும். பத்மாவைப் பற்றி டீச்சர்கிட்டே யாருமே சொல்ல மாட்டாங்களே. பத்மாவைத்தான் எல்லாருக்கும் பிடிக்கும். என்று மீனு உறுதியாகச் சொன்னாள். இப்படி எல்லாம் செய்யக்கூடாது, கண்ணு. பத்மா துஷ்டப் பெண் போலிருக்கு. அதுகூட நீ சேராதே, என்று அம்மா கண்டிப்பாகக் கூறினாள். ஆயினும், மீனுக்குட்டியின் உலகத்தில் பத்மா அசைக்க முடியாத வலிய சக்தியாகப் புகுந்துவிட்டாள் என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர முடிகிறது. பள்ளியில் பகல் பொழுதைப் போக்கிவிட்டு வீடு திரும்புகிற மீனுக்குட்டிக்கு, அப்புறம் துரங்கப் போகும்வரை பத்மாவின் நினைப்புத்தான். அவளைப் பற்றிய பேச்சுத்தான். 'தங்கம்னு ஒரு பொண்ணு. அதுக்கு ரொம்பவும் பெருமை. நாம ரொம்ப அழகுன்னு நினைப்பு. நான் ரோசாப்பூ மாதிரி இருக்கேன்னு வீட்டிலே சொல்லுவாங்க என்று பீத்திக்கிடுவா. அப்படிச் சொல்லையிலே அதுங் கன்னத்திலே நறுக்குன்னு கிள்ளணும். ரத்தம் வரும்படியாப் பிறாண்டனும்னு எனக்குக் கூடத் தோணும். பத்மாவுக்கு எப்படி இருக்கும்? இன்னிக்கு அந்தக் குரங்குத் தங்கம் வெள்ளை வெளேர்னு ஜோரா ஒரு கவுன் போட்டுக் கொண்டிருந்தது. நான் ரோசாப்பூ மாதிரி என்று பீத்தியது. பத்மா ஒரு வேலை செய்தாள். டீச்சர் மேசை மேலே இருந்த சிவப்பு மைக்கூட்டை எடுத்தாள். அத்தனை மையையும் தங்கத்தின் சட்டையிலே கொட்டினாள். ரோசாப்பூ சிவப்பாத்தான் இருக்கும். இப்பத்தான் நீ ரோசாத்தி என்றாள். அப்ப தங்கத்தைப் பார்க்கணும். சரியான செங்குரங்கு ஆகிவிட்டது அது." இப்படி ஒருநாள் மீனு சொன்னாள். 'டீச்சர் பத்மாவைக் கண்டிக்கவில்லையா? என்று அம்மா கேட்டாள்.