பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| காதலுக்குமுண்டோ கடன்? | & 30 அன்று அவனிடம் ஒன்றரையனா இல்லை; அவனது செலவுக்குப் போதுமான காசுகள் தான் இருந்தன. அதற்கு மறுநாளும் அவனிடம் ஒன்றரை அணாவாக இல்லை! நாலனா நாணயம் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவள் அருகில் போய், உனக்குச் சேரவேண்டிய ஒன்றரை யனாவை எடுத்துக் கொள். பாக்கி தா!' என்று சொல்லலாமென நினைத்தான். ஆனால் அவள் பக்கத்தில் குறும்புக்காரி பத்மாவும், திமிர் பிடித்த லலிதாவும், கர்விகள் போல் தோன்றிய இன்னும் இரண்டு பெண்களும் காணப்பட்டார்கள். நான் அவளுடன் பேசுவதற்கு ஆசைப்பட்டுத்தான் இவ்விதம் செயல் புரிவதாக அந்த மூன்றும் நினைத்துவிடும்! அப்புறம் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேலி பேசி லூட்டி அடிப்பார்கள் என்று அவன் மனம் குறுகுறுத்தது. - இப்படிக் காலம் ஒடியதே தவிர, கடன் தீர்ந்தபாடாக இல்லை! காலக் கோளாறு என்பது இதுதான் போலும் என்று விஸ்வம் அலுத்துக் கொண்டான். 2 காலக்கோளாறு, சந்தர்ப்ப சகாயம் என்பதெல்லாம் வாழ்க்கையில் எதிர்ப்படத்தான் செய்கின்றன. துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்று சொன்னாலும் சரிதான் :- இவ்விதமாக விஸ்வநாதன் எண்ணிக்கொள்ள வேண்டிய அவசியமும் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே ஏற்பட்டுவிட்டது. விஸ்வநாதனின் தந்தை பரமானந்தம் திடுமென்று அறிவித்தார். அவருக்குத் தெரிந்தவர். ஒருவரின் மகளை, அவனுக்கு மனம் முடித்து வைக்க விரும்புவதாகவும், ஜாதகமெல்லாம் திருப்திகரமாக அமைந்திருப்பதாகவும் அவர் சொன்னார். நல்ல நாள் என்று ஒரு நாளைத் தேர்ந்து, பெண்ணைப் பேட்டி காண்பதற்காக அவனை அழைத்தும் சென்றார். தன்னுடைய வாழ்க்கை நாவலில் சுவை சேர்ப்பதற்காகத் தந்தை தேர்ந்துள்ள கதாநாயகி தனக்கு