பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் மனத்தை அலைக்கழிக்கும். சில சமயங்களில் தானும் பெரிய புத்திசாலி என்று காட்டிக் கொள்வதற்காகவே அவள் கேள்விகள் கேட்டது உண்டு. செவ்வாய்க் கிரகத்தில் விசித்திர மனிதர்கள் வசிக்கிறார்களா? பறக்கும் தட்டில் மனிதர்கள் ஏறி வந்தார்களாமே ' என்ற தன்மையில் ஏதாவது கேட்டு வைப்பாள். ஒருநாள் அவள் வேகமாக வந்தாள், நீங்களே சொல்லுங்கள்!' என்று கூறிக்கொண்டு, "ராமனுக்கு அடுத்தவன் லட்சுமணன் தானே? நான் அப்படித் தான் என்கிறேன். ராமு அது தப்பு என்கிறான். பரதன் லட்சுமணனை விட மூத்தவன் என்கிறான். அது எப்படி? சத்துருக்கனர் என்று தானே எல்லோரும் சொல்கிறார்கள்?" என்றாள் கல்யாணி, வழக்கத்தில் அவ்வாறே கேள்விப்பட்டுப் பழகியிருந்த கைலாசத்துக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. ஆகவே அவள் கட்சியை அவன் ஆதரித்தான். கேளுடா, கேளு!’ என்று கைகொட்டி ஆரவாரித்தாள் கல்யாணி. ஆனால் ராமமூர்த்தி அதை ஏற்றுக் கொள்பவனாக இல்லை. ராமருக்கு அடுத்தவன் பரதன் தான். பரதனுக்குப் பிறகு தான் லட்சுமணன் பிறந்தான் என்று உறுதியாகச் சொன்னான் அவன். "நீ அப்போ கூட இருந்தியாக்கும்? அல்லது ஜாதகம் கணிக்க உன்னைத் தான் அழைத்திருந்தார்களோ?” என்று வாய் அடி அடித்தாள் கல்யாணி, ராமமூர்த்தி பேசாமல் உள்ளே போய், இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்து வந்தான். பக்கங்களைப் புரட்டி உரிய இடங்களைக் காட்டினான். அவன் சொன்னது தான் சரியாக இருந்தது. அது கல்யாணிக்கு வருத்தமே தந்தது. "இந்தப் புத்தகங்களில் தப்பாக அச்சிட்டிருக்கும்" என்று சாதிக்க முயன்றாள் அவள். ஆனால் அந்தக் குரல்