பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

争办 43 - | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | அவர்களுக்கு வருத்தம் ஏற்படுத்திவிட்டேன்' என்று எண்ணினான் கைலாசம். - கல்யாணியைப் பற்றி அவன் அதிவிசேஷ மான நினைப்பு எதுவும் கொண்டிருக்கவில்லை. அழகான பெண். இனிமையாக நடந்து கொண்டாள் என்றுதான் அவன் மனம் பாராட்டு உரை கூறியது. அந்த அழகான பெண் மேலும் இனிமையான முறையிலே செயல்திட்டம் வகுத்துத் தன் இஷ்டம் போல் நடந்து கொள்வாள் என்பதை அவன் எதிர்பார்க்கவே யில்லை. - - - சுந்தரம்பிள்ளை தமது மகள் கல்யாணிக்கு மணம் முடித்து வைக்க அரும்பாடுபட்டார். கலியானச் சந்தையிலே மாப்பிள்ளைகளுக்குக் கிராக்கி அதிகம் என அவர் உணர்ந்தார். பல ஆயிரங்களை அள்ளிக்கொடுக்கும் நிலையில் இல்லாததனால் அவர் மன உளைச்சல் அநுபவித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது தான் நம்பியா பிள்ளை ஒரு வழிகாட்ட முன்வந்தார். கல்யாணியைக் கைலாசத்துக்கு மணம் முடித்து விடலாம் என்று நம்பியா பிள்ளை சொன்னதும் சுந்தரம் பிள்ளை தலையைச் சொரிந்தார். தயங்கினார். "பையன் நல்லவன் தான். ஆனால் வேலை வெட்டி இல்லாமல் வீண் பொழுது போக்கித் திரிகிறானே. பொறுப்பில்லாமல் காணப்படுகிறானே. அதுதான் யோசனையாக இருக்கிறது" என்று சொன்னார். - - •, - "இளம் பிராயம், பாருங்க, இப்போது அப்படித்தான் இருக்கும். ஒரு கால் கட்டை ஏற்படுத்தி குடும்பப் பொறுப்பைச் சுமத்தியாச்சு என்றால் பிள்ளையாண்டான் தானாக வழிக்கு வந்து விடுவான்” என்றார் நம்பியா பிள்ளை. அவருக்கு எப்பொழுதுமே கைலாசத்தின் நலனில் அக்கறை உண்டு.