பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 o' வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | ஊரிலே உள்ள எல்லாருமே மூக்கு மேலே விரலு வைத்து நிற்பாங்க..!" - "ஐயோ!.உம்ம்..உங்கள் கோழிக்குக் கண்ணு பட்டுவிடப் போகுது! மிளகா வத்தலை சுற்றி, தீயிலே போட்டு, திருஷ்டி கழியுங்க ஐயா!" என்று நீட்டி நீட்டிப் பேசினாள் செல்லம். "மூக்க தேவரு சேவலை தோற்கடிக்கிறது என்றால் லேசா? அதை நம்ப சேவல் செய்து காட்டப் போகுது. மனசிலே வச்சுக்க" என்று கூறிச் சிரித்தான் அவன். "என்னது? என்ன சொன்னே?" "நான் சொன்னது உனக்குக் கேட்கவும் கேட்டிருக்கும். புரிஞ்சிருக்கவும் செய்யும். வீணாக நீ ஏன்..." செல்லம் கட கடவென்று சிரிக்கலானாள். பிறகு சிரிப்பை ஒடுக்கி விட்டு, "ஒகோ, அதுவும் அப்படியா? ரொம்ப சரி” என்றாள். "அப்படியானால் நீ சேவலுக்கு இன்னும் ஊட்டம் கொடு, தண்டியும் சதையுமாக ஆனால் தானே எங்களுக்கு நல்லது!" என்று சிரிக்காமலே கூறினாள். முருகையா விஷயம் புரியாமல் விழித்தான். சேவல் சண்டையில் வெற்றி பெறும் சேவல் சொந்தக் காரனுக்கு பந்தயப் பணமும் கிடைக்கும், தோல்வி கண்டு சாகிற சேவலும் கிடைக்கும். இந்த விதி முருகையாவுக்கு தெரியும் தன்னுடைய சேவலுக்கு நிச்சயமான தோல்வி என்று கணித்துக் கூறிய செல்லத்தின்மீது அவனுக்குக் கோபம் ஏற்பட்டது. எனினும் அவன் எரிந்து விழவில்லை. “சரி சரி, அதையும்தான் பார்க்கலாமே!” என்று சொல்லி வைத்தான். முருகையாவின் சேவலைப் பற்றி எங்கும் பேச்சு பரவியது. சேவல் சண்டைக்கு நாளும் இடமும் குறித்துவிட்ட பிறகு ஊரில் பரபரப்பும் கட்சிகளும் பெருகின. மூக்கத்தேவரு கோழியை பீட் அடிக்கிறதாவது!