பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీe R [ജ് * 64 கொண்டிருந்தது. "அவன் சேவல் மட்டும் ஜெயிக்கட்டும், அப்புறம் பார்த்துக் கொள்கிறேன்" என்றும் தேவர் கறுவினார். இவ்விதம் அவர் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. சண்டை மைதானத்துக்கு வந்து சேர்ந்த முருகையாவின் சேவலைப் பார்த்ததுமே தேவருக்கு உற்சாகம் பிறந்து விட்டது. அது சோர்ந்து போனது போல் நிற்பதைக் கவனித்ததும் அவர் கெக்கலி கொட்டிச் சிரித்தார். "எங்கள் வீரய்யாவைத் தோற்கடிக்கப் போகிற சூர வேலு இதுதானா? பளா பளா" என்று கூவி, கை கொட்டினார் மூக்கத் தேவர். "பெட்டைக்கு ஏங்கி நிற்கிற சேவல் இது. இதைச் சண்டைக்கு அனுப்பாதே, முருகா குப்பை மேட்டிலே கோழிகள் மேய்கிற இடத்திலே கொண்டு போய் விட்டு விடு" என்று சொன்னார். தேவரின் பேச்சு முருகையாவுக்கும் அவனுடைய சகாக்களுக்கும் சூடு ஏற்றியது. "ஏன் தேவரையா, வாய் வீச்சு வீசlங்க? உங்க சேவலு தான் பெரிசு என்றால் அது சண்டையிலேயே முடிவாகட்டுமே!" என்று அறிவித்தார்கள். அனுபவம் மிகுந்த முக்கத்தேவர் சொன்னது பொய்யாகி விடவில்லை. கத்தி கட்டி விடப்பட்ட சேவல்கள் களத்தில் சந்தித்தன. முறைத்தன. மோதின. சாடி சமரிட்டன. தேவரின் சேவல் சிரமம் இல்லாமலே முருகையாவின் சேவலைத் தாக்கி, ரத்தக் காயங்கள் உண்டு பண்ணி, படுக்கவைத்துவிட்டது. பணமும் சேவலும் தேவர் கையில் சேர்ந்தன. "இந்தா செல்லம்!" என்று அன்பாக அழைத்து தோல்வியுற்ற சேவலை அவளிடம் கொடுத்தார் மூக்கத்தேவர். - - . . . . - அதை ஏற்றுக்கொண்ட செல்லத்தின் கண்கள் விஷமப் பார்வையர்ல் முருகையாவின் முகத்தைத் தட்வின. அக்கரிய விழிகளிலே ஒளி செய்த கறும்புத் தனத்தை அவனால்