பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 & (வல்லிக்கண்ணனின் மணியான ægš! அவருக்கு அடிக்கடி பிள்ளையைத் தேடி வந்து உற்சாகமாக உரையாடிச் செல்வார் அவர், அன்றும் நாராயணன் வந்தார். வழக்கம் போல் கிருஷ்ண பிள்ளை சோம்பிக் கிடப்பார், அல்லது, புத்தகமும் கையுமாய்க் காட்சி தருவார் என்று எண்ணிக் கொண்டு தான் வந்தார். ஆனால் அவர் எதிர்பாராததை-எதிர்பார்க்க முடியாததை-அன்று காண நேர்ந்தது; பிறகு கேட்கவும் நேர்ந்தது. அலமாரியிலிருந்தும் பெட்டிகளிலிருந்தும் புத்தகங்களை வெளியே எடுத்து எங்கும் பரப்பியிருந்தார் கிருஷ்ண பிள்ளை. அவற்றிடையே ஏதோ எண்ண ஓட்டத்தில் தம்மை இழந்தவராய் அவர் காணப்பட்டார். இத் தோற்றம் நாராயணனுக்கு ஆச்சரியம் அளித்தது. அதை விட அதிக வியப்பாகத் திகழ்ந்தது. பிள்ளை தமது கையில் வைத்திருந்த ஒரு பொருள். அழகான சங்கிலி, சிறு சிறு மாம்பிஞ்சுகளைக் கோத்து மாலையாக்கியது போன்ற சங்கிலி மஞ்சளாக மினுமினுத்தது. பொன் போல் தோன்றும் பொருள். ஆனால் தங்கமல்ல. நாகரிகப் போலி அணிகளில் ஒன்று. அது பூரணமாகவுமில்லை. அறுபட்டு நீளமாய் இருந்தது. புது மெருகுடன் பளபளக்கவுமில்லை அது நாள் பட்டது போல் மங்கிப் பொலிவு குன்றிக் காணப்பட்டது. இதை ஏன் இவர் இப்படிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் ' என்று குறுகுறுத்தது நாராயணன் மனம். 'என்னய்யா அது பொன் சங்கிலி மாதிரி இருக்கு ஏது உமக்கு ' என்று அவர் விசாரித்தார். கையிலிருந்த சங்கிலியைப் பார்த்தார் கிருஷ்ண பிள்ளை, நண்பரின் முகத்தைப் பார்த்தார். தொடர்ந்து அவர் கண்கள் வெறும் வெளியில் நீந்தின. பிறர் பார்க்க முடியாத எதையோ நோக்குவன போல் அவை நிலை