பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 & ಎಖóg...] 'இப்போ சமீபத்தில் நிகழ்ந்தது போல் இருக்கு. யோசித்துப் பார்த்தால், பதினைந்து, பதினாறு வருஷங்கள் ஒடியிருப்பதாகப் புரிகிறது.ஊம்! காலம் ரொம்ப வேகமாகத் தான் ஒடுகிறது! அப்பொழுது எனக்கு இருபத்தாறு வயசு. உமாவுக்கு என்ன, பதினேழு பதினெட்டு வயதிருக்கும். இருந்தாலும் அவள் சிறுமிதான். சரியான விளையாட்டுப் 'உமாவா? யார் அது ? நான் அவளைப் பார்த்திருக்கிறேனா? என்று கேட்டார் நாராயணன். 'நீர் பார்த்திருக்க முடியாது. நான் அப்பொழுது வேறொரு ஊரில் தங்கியிருந்தேன். ஏதோ அழுது வடிந்த ஆபீஸ் ஒன்றில் என்னவோ இழவெடுத்த உத்தியோகம் என்று வைத்துக் கொள்ளுமேன் ஆபீஸ், மேஜை, நாற்காலி எல்லா ஜபர்தஸ்துகளுக்கும் குறை எதுவும் கிடையாது. அதிகாரி என்று ஒருவர் இருந்தார். அவரோ வருஷத்தில் முக்கால் வாசி நாள் லீவில் போய் விடுவார். பியூன் ஊர் சுற்றப் போய் விடுவான். நான் மட்டும் தான். தனிக்காட்டு ராஜா என்பார்களே, அது மாதிரி, நான் சோம்பேறியாக வளர்ந்ததற்கு இப்படிப்பட்ட உத்தியோகங்களே எனக்குக் கிடைத்து வந்ததும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஆபீஸ் இருந்த வீட்டை ஒட்டி இன்னொரு வீடு. இரண்டுக்கும் ஒரே வராண்டா அந்த வீட்டை ஒளியுறுத்திக் கொண்டிருந்தவள் தான் உமா என் வாழ்விலும் மின்னல் போல் பளிச்சிட்டு மறைந்த பெருமை அவளுக்கு உண்டு. நான் எப்பொழுதும் போல் தான். சதா ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். அந்தப் பெண் அடிக்கடி கவனித்திருக்கக் கூடும். ஒருநாள் ஒரு சிறுவனை அனுப்பி, படிப்பதற்குப் புத்தகம் வேண்டும் என்று கேட்டாள். கொடுத்தேன். இரண்டொரு. நாள் பையன் வந்து போனான். பிறகு அவளே நேரில் வாசல் படி மீது வந்து நின்று புத்தகம் கேட்கத் துணிந்தாள். அப்புறம் மேஜை அருகிலேயே வர ஆரம்பித்தாள். படித்த