பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 «3» |வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | மூடி விட வேண்டாமா? என்று சொல்லி நான் படிக்கும் புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிடுவாள். எனக்கு வரும் கோபத்தைக் கண்டு கலகலவெனச் சிரிப்பாள். உமாவின் போக்கு எனக்கு வருத்தம் அளித்தாலும் அவள் பேச்சும் சிரிப்பும் மிகுந்த மகிழ்வுதான் தந்தன. இன்பக் கதைகள் எல்லாம் உன்னைப் போல் ஏடுகள் சொல்வதுண்டோ? என்று அவள் கன்னத்தைத் தட்டி, விளையாட்டாகக் கிள்ள வேண்டும், நீண்டு தொங்கும் பின்னலைப் பிடித்திழுக்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு எழும். அதைத் தடுத்து விடும் உறுதி எனக்கு இருந்ததுமில்லை. ஆ. சென்றுபோன அந்த இன்ப நாட்கள்!" கிருஷ்ணபிள்ளை நினைவுச் சுழலிலே சிக்கி விட்டார் என்று தோன்றியது. சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தார் அவர். 'சரி ஐயா, இந்தச் சங்கிலியைப் பற்றிக் கேட்டால் நீர் பாட்டுக்கு அளக்க ஆரம்பித்து விட்டீரே" என்று கெண்டை பண்ண ஆசைப்பட்டார் நாராயணன், மனுசன் வள்னு எரிஞ்சு விழுந்தாலும் விழுவான்! அவன் போக்கிலேயே சொல்லட்டுமே என்று அவர் மனம் லகானைச் சுண்டியது. கிருஷ்ணபிள்ளை தொடர்ந்து சொன்னார் ஒரு சமயம் நான் சுவாரசியமாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். உமா பூனை போல் வந்திருக்கிறாள். அது எனக்குத் தெரியாது. படீரென்று புத்தகத்தைப் பிடித்து இழுக்கவும் நான் திடுக்கிட்டேன். அவள் விஷமச் சிரிப்போடு அதை வெடுக்கென்று பிடுங்கினாள். நான் பலமாகப் பற்றியிருந்தேன். எங்கள் பலப் பரிசோதனையில் நடுவே திண்டாடிய புத்தகத்தில் ஒரு தாள் கிழிந்து விட்டது. அருமையான புத்தகம் பாழாகி விட்டதே என்ற ஆத்திரம் எனக்கு. வெறி உணர்வோடு அவள் கன்னத்தில் ஓங்கி ஒர் அறை கொடுத்தேன். 'சனியன்! படிக்கையிலே வந்து தொந்தரவு கொடுப்பது மில்லாமல், புத்தகத்தை வேறே நாசமாக்கி விட்டதே என்று முணுமுணுத்தேன். அவள்