பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 & ೩6666666666fusiaಣgs:} டாக்டருக்கு, அவன் மனசில் ஏதோ ஒரு நினைப்பு அழுத்தமாகப் பதிந்திருக்கிறது என்று புரிந்தது. அவன் சில சமயங்களில் பொம்மைப் பாப்பா என்று முனங்கியதையும் அவர் கவனித்தார். அதைக் குறித்து டாக்டர் மணியின் பெற்றோர்களிடம் விசாரித்தார். அவர்கள் நடந்த விஷயத்தை விளக்கினார்கள். 'குழந்தைக்கு அந்தப் பொம்மையை வாங்கிக் கொடுப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் வியாதி சீக்கிரம் குணமாகும் என்று டாக்டர் கூறினார். ‘மணி, நீ சீக்கிரம் குணமாகி எழுந்து ஓடி ஆடி விளையாட வேண்டாமா? உனக்கு பொம்மைப் பாப்பா தானே வேணும்? வாங்கித் தருவோம். அப்பா நாளைக்கே வாங்கி வருவாங்க என்று பார்வதி பையனிடம் அன்பு ததும்பச் சொன்னாள். குழந்தையின் கண்களில் மகிழ்வின் ஒளி தெறித்தது. முகத்தில் சிறு மலர்ச்சி, உதடுகள் அசைந்தன. நிஜம்மா? பொம்மைப் பாப்பாவா? என்று முணுமுணுத்தான் மணி. ஆமா, நீ கடையிலே பார்த்தியே, அதே பொம்மை தான் என்று அம்மா உறுதி கூறினாள். மணிக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. உள்ளத்தில் ஊற்றெடுத்த குதூகலம் உடலுக்கும் உணர்வுக்கும் தெம்பு கொடுத்தது. அவன் முகத்தில் தெளிவு படர்ந்தது. அவனுக்குப் புதியதோர் சக்தி வந்து சேர்ந்தது போலிருந்தது. அவன் அந்த பொம்மையைப் பற்றியே பேசினான். பக்கத்துப் படுக்கையில் கிடந்த வேறொரு சிறுவனிடம் பொம்மைப் பாப்பாவின் சிறப்புகளை எடுத்துச் சொல்வதில் அவனுக்கு அலுப்பு ஏற்படவேயில்லை; அளவு இல்லாத உவகையே பிறந்தது. அது ஜோராக இருக்கும். அதன் கண்கள் நம்மையே