பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| மனம் எனும் புதிர் & 96 கொள். உனக்கே உனக்கு!" என்று திடமாக அறிவித்தான் மணி. பெரியவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். "சும்மா சொல்றே!” என்றான் பாலு, நம்ப முடியாமல், "நிஜம்மா பாலு, உனக்குத்தான்" என்று கூறித் தாயார் பக்கம் திரும்பி, "அம்மா அதை நான் பாலுவுக்குக் கொடுத்து விடுகிறேன். அவன் பாவம்-" என்றான். பிறகு சொன்னான்: "அப்பா, எனக்கு வேறே பொம்மை வேண்டாம். நான் அழவே மாட்டேன்." "சரிடா கண்ணா, உன் இஷ்டம்போல் செய்" என்று சொன்ன தாய், அவனை எடுத்து பொம்மையோடு மார்புடன் சேர்த்து அணைத்து மகிழ்வுற்றாள். "எங்கள் மணிப்பயல் சமர்த்துக் குழந்தை அல்லவா!' என்றார் கைலாசம், எப்படியாவது குழந்தை சந்தோஷமாகவும் நோய் இல்லாமலும் பிழைத்து எழுந்தால் சரி என்று தான் அவர் நினைத்தார். பொம்மை பெற்ற பாலுவின் முகத்தைக் கண்டவர், 'மணி செய்தது தான் மிக நல்ல காரியம் என்று கருதினார். தனக்கு அந்தப் பொம்மைப் பாப்பா வேண்டும் என்று துடித்த சிறு உள்ளத்துக்கு இத்தகைய பெரிய எண்ணம் எப்படி வந்தது என்பது யாருக்கும் புரியவில்லை. "எவ்வளவோ விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை. முக்கியமாக மனத்தின் தன்மைகளையும் ரகசியங்களையும் முற்றும் உணர்ந்தவர் எவருமிலர். பெரியவர் மனமாக இருந்தால் என்ன, குழந்தை மனமாக இருந்தால் என்ன ? மனம் என்பது இலகுவில் புரிந்து கொள்ள முடியாத விஷயம் தான்" என்று டாக்டர் சொன்னார். - క్లేస్టి