பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 வல்லிக்கண்ணன்

முப்பது மைல் நடந்தால் பதின்மூன்றரை நாட்களில் சென்னை சேரலாம். எப்படியும் பதினைந்து நாட்களில் சென்னையை அடைந்துவிடமுடியும்.

இவ்விதம் என் மனம் பல நாட்களாகக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் துணிந்து கிளம்பினேன். வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் போகவிட மாட்டார்கள. இவ்வளவு தூரம் நடந்தே போவதாவது! வழியில் சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்? இப்படிப் பலப்பல கேள்விகள் கேட்டு என்னைத் தடுத்திருப்பார்கள்.

நடப்பது என்பது எனக்கு மலைப்பு தரும் காரியமில்லை. மாணவப்பருவத்திலேயே பலப்பல மைல்கள் நடந்து பழகியவன் தான். ராஜவல்லி புரத்திலிருந்து பாளையங்கோட்டைக்கு அநேக நாட்கள் நடந்திருக்கிறேன். பிறகு வேலையின்றி வீட்டிலிருந்த போது ஆனந்தவிகடன் விாங்குவதற்காக ராஜவல்லிபுரத்தில் இருந்து ஆற்றங்கரைப் பாதை வழியாகத் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்து பத்திரிகை வாங்கிக்கொண்டு வந்த வழியாக நடந்திருக் கிறேன். இப்படி வாரம்தோறும் இரண்டு வருடங்கள் பழக்கம் அது. மேலும், அந்நாட்களில் எவ்வளவு தூரமானாலும் நடந்து போகத்தயங்காதவர்கள். கிராமங்களில் இருந்தார்கள். துரத்துக் குடிக்கும் திருந்செந்தூருக்கும் சேரகுளம் கார்சேரி போன்ற துரத்து ஊர்களுக்கும் நடந்தே போய் நடந்து திரும்பியவர்கள் எங்கள் ஊரில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நடப்பது இயல்பான ஒரு செயலாகவே இருந்தது. எனக்கும்தான்.

நான் பாடப்புத்தகத்தில் ஆலிவர் கோல்டுஸ்மித் என்ற கவிஞன் நாவலாசிரியன் பற்றிப் படித்திருந்தேன். அவன் நடந்து நடந்தே ஐரோப்பா முழுவதும் கண்டறிந்தான். பின்னர் மாக்சிம் கார்க்கி பற்றிப் படித்தேன். அவன் நடந்து நடந்தே ரஷ்ய நாட்டின் நீள அகலங்களைக் கண்டதோடு பல்வேறு மக்களின் வாழ்க்கை முறைகளையும் கலாசாரங்களையும் பற்றித் தெரிந்து கொண்டான். இப்படி கார்க்கியின் வரலாறு கூறியது. பெனிட்டோ முசோலினி என்கிற இத்தாலிய சர்வாதிகாரி அவனது இளமைப் பிராயத்தில், பையில் மூன்றே காசுகளுடன் அவன் ஊரிலிருந்து ரோமாபுரிக்கு நடந்தே வந்தான். இதுவும் வரலாறுதான். சுவாமி விவேகானந்தர் நடந்து நடந்தே இமயம் முதல் குமரிவரை சென்று பாரததரிசனம் も%念ööfl_frfr.

இத்தகைய இலட்சிய வழிகாட்டுதல்கள் என்னுள் நெடுங் காலமாகவே வேலை செய்துகொண்டிருந்தன. நானும் இப்படி நடந்து நடந்தே ஊர்களைப் பற்றியும் மனிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான