பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{#8 வல்லிக்கண்ணன்

நிறத்தில் மிளிர்ந்தது. அது தாமிரநிறம் என்றும், அதனாலேயே ஆறு தாமிரவரணி எனப் பெயர் பெற்றது எனவும் சொல்லப்

منتييس اسسس لس

மழைக்காலத்தில் ஆறு வெகுண்டு பொங்கிப் பிரவாகித்து, இரு கரையும் நீர் தொட்டுத் தழுவி ஒட, மிடுக்காகப் பயங்கர மாகக் கூட காட்சி தரும். கோடைகாலத்தில் ஆறு மெலிந்து காணப்படும். தண்ணிர் சுத்தமாக ஒடிக் கொண்டுதான் இருந்தது. நீர் வற்றித் தேங்கி, சாக்கடைக் குட்டைகளாக அந்நாட்களில் ஆறு இருந்ததில்லை.

நண்பர் குறிப்பிடுகிற பகுதியில் திருநெல்வேலி சந்திப்பை ஒட்டிய கைலாசபுரம், மீனாட்சிபுரம், கொக்கிரகுளம் முதலிய ஊர்களைச் சார்ந்த பகுதிகளில், மணல் வெண்மையாய்ப் பெரும் பரப்பாய் விரிந்து கிடந்தது. சுலோசன முதலியார் பாலத்தை அடுத்தும் தைப்பூசமண்டபத்தை ஒட்டியும் அகன்று கிடந்த மணல் பரப்பில் பெரிய பெரிய பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

1933 அல்லது 3 இருக்கலாம். தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஜவகர்லால் நேரு, அவர் மனைவி கமலா நேரு, மகள் இந்திரா மூவரும் ஆற்றுமணலில் அமைக்கப்பட்ட மேடையில் தோன்றினார்கள். அவர்களைப் பார்ப்பதற்காகப் பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தனர். ஜவகர்லால் நேரு சொற்பொழிவாற்றினார். இப்படி வரலாற்றுப் புகழ்பெற்ற கூட்டங்கள் நிகழ்ந்த இடம் - மணல்வெளி - அது.

நான் வசித்த ராஜவல்லிபுரம் ஊரிலிருந்து தெற்கே ஒரு மைல்துாரத்தில் ஒடுகிறது. தாமிரவரணி. அந்த இடத்துக்கு செப்பறை என்று பெயர். தாமிரசபை (செப்பறையில் வீற்றிருக்கும் நடராஜர் திருக்கோயில் அங்கே இருக்கிறது. காட்டுக் கோயில் என்பார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். பனை மரங் களும் உடை கருவேல மரங்களும் செறிந்திருக்கும் இடம்.

கோயிலில் இருந்து ஒரு பர்லாங் தள்ளி, பள்ளத்தில் கிடக்கிறது ஆறு. அங்கும் முன்னர் மணல்வெளி பரந்து கிடந்தது. அமைதி நிறைந்த அச்சூழலில் அழகிய மணலில், காலையிலும் மாலையிலும் நான், என் அண்ணா, ஒரு நண்பர் மூவரும் யோகாசனப்பயிற்சிகள் செய்வது வழக்கம். அந்நாட்களில் பெங்களுர் சுந்தரம் என்பவர் யோகாசனப் பயிற்சி முறைகளை அருமையான நடையில், வாரப் பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதி வந்தார், ஆனந்தரகஸ்யம் என்ற தலைப்பில், பிறகு தொடர்ந்து ஆரோக்கிய ரகஸ்யம் என்ற தலைப்பில் இதர உடற்