பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 11 போக விரும்பாததனால், நான் என்னுடைய முறையை உங்களுக்குக் கொடுக்க எனக்கு முழுஉரிமையும் இருக்கிறது.

அதற்குப் பதிலாக உங்கள் இடத்தில் கடைசியாக நான் இருந்து கொள்வேன் என்றார்.

பார்பர் ஷாப்பில் இருந்த எல்லோரும் இதற்கு லெனின் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அவர்களது வேண்டுகோளுக்கு அவர் இணங்கவேண்டியதாயிற்று.

சவரத் தொழிலாளி வேலையை முடித்தவுடன் லெனின் போய் வருகிறேன். தோழர்களே, மிக்க நன்றி என்று கூறிவிட்டு வெளியேறினார்.

அவர் உண்மையான பெரிய மனிதர், அவரிடம் மக்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

உழைக்காமல் இருப்பதுதான் பெரிய மனிதத்தனம் என்ற நம்பிக்கையோடு ரொம்பப் பேர் வாழ்கிறார்கள். வெறும் நபர்களே இப்படி என்றால் தலைவர்கள் ஆகிவிடுகிறவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ? சொந்த வேலையைக் கூடச் செய்யாமல் சுகவாழ்வு வாழ்வதே உயர்வுக்கு அடையாளம் என்று எண்ணு கிறவர்கள் அவர்கள். ஆனால் லெனின் அப்படிப்பட்டவர் அல்லர். "உழைப்பே இன்பம் என்று டால்ஸ்டாய் சொன்னார். இதை லெனின் பின்னர் திரும்பத்திரும்பக் கூறினார். லெனினும் தாமே உடலுழைப்பில் ஈடுபட்டார். ஆனால் கூலிக்காக அல்ல. எதிர்காலக்கம்யூனிஸ்ட் உழைப்பு என்று அவர் அதைக் குறிப் பிட்டார்” இப்படி எழுதியிருக்கிறார் மிக்கோயன், ஒரு கட்டுரையிலே, உழைப்பு குறித்து லெனின் கொண்டிருந்த மனோபாவத்தை விளக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சி ரசமானது.

இளம் சோவியத் அரசின் நெருக்கடியான காலகட்டம் அது. உள்நாட்டு யுத்தத்தினாலும், அந்நியர் தலையீட்டினாலும் நிலைமை மோசமாகியிருந்தது. இளம்குடியரசு தனது பொருளாதாரத்தைப் புதிதாகக் கட்டவேண்டியிருந்தது. ஆகையால் விடுமுறை நாட்களிலும் வாரநாட்களின் ஒய்வு நேரங்களிலும், நாட்டுநலனுக்காக சோவியத் மக்கள் ஒன்று திரண்டு, இலவசமாக வேலை செய்ய முற்பட் டார்கள். பொதுவாக அவர்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்தார்கள். இதனால், மக்களில் பெரும்பகுதியினர் கபோத் னிக்குகள் என்று அழைக்கப்பட்டனர். ரஷ்ய மொழியில் கபோத்தா என்றால் சனிக்கிழமை என்று பொருள்.

1920ஆம் ஆண்டு மே முதல் நாள் அகில ரஷ்ய சுபோத்ணிக்