பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$26 வல்லிக்கண்ணன்

உழைக்கிறார்கள். நடந்துநடந்து கஷ்டப்படுகிறார்கள். உலகம் இப்படித்தான் இருந்தது. இப்பவும் இருக்கிறது. இன்னும் இப்படியேதான் இருக்கும். இது வேறுவிதமாக இருந்திருக்கலாமா வேறு வகையாக இருக்க வேண்டுமோ T65@pುಖTಿ எண்ணிக் குழம்புவதும் குழப்புவதும் வீண்வேலை. சிலர் கஷ்டப்படவும் சிலர் சுகமாக வாழவும் தான் சூழ்நிலை உதவுகிறது என்றால், புத்திசாலி செய்யவேண்டிய காரியம் என்ன? தான் கஷ்டப் படாமல், சுகமாக வாழ வழிவகைகளைத் தேடிக்கொள்ள வேண்டும். ஆண்டவன் வந்து உதவமாட்டான். அவனவன் தன்தன் பாட்டைக் கவனித்தாக வேண்டும். இது மகத்தான சுயநலமா? ஏய், நன்றாக வாழ்ந்த சுகம் அனுபவித்து இன்புற வேண்டும் என்கிற வாழ்க்கைத்தத்துவம் நலத்தத்துவமாக அல்லாது வேறு எப்படி இருக்கமுடியும்? மற்றவர்களின் விதியைப்பற்றி கடின சித்தத்தோடு இராது வேறு என்ன செய்ய முடியும்? மனித இனத்தை நேசிக்க வேண்டுமா? நேசி. அது எப்படி இருக்கிறதோ குறைபாடுகள் நலன்கள் அனைத்துடனும் நேசி. இந்த விதமாக எண்ணிச் செயல்புரிந்தவன் காஸனோவா.

வாழ்வின் இன்பங்களைச் சுவைக்கவேண்டும் என்று ஆசைப் பட்ட காலனோவாவைக் கவர்ந்த இனிமைகள் பெண்கள்தான். ஒளிப்பூக்கள் நிறைந்து குலுங்கும் இரவு வானமோ தகத்தகாயச் சூரியஉதயமோ, அந்தி வேளையின் விந்தைக்கோலங்களோ, இயற்கையின் அற்புதஅழகுகளோ அவன் உள்ளத்தைத் தொட்டதாக ஒருவரிகூட இல்லை. அவனது பதினாறு தொகுதி சுயவரலாற்றிலே, ஐரோப்பாவின் அழகு மிக்கப் பரப்புகளில் எல்லாம் சுற்றித் திரிந்தவன் தானே இந் ரசிகசிகாமணி அங்குள்ள எழில்களில் எதைப் பற்றியோ மேதைகள் படைத்த ஒவியங்கள் சிற்பங்கள் பற்றியோ, கம்பீரமான கட்டிடங்கள் குறித்தோ அவன் எதுவும் எழுதவே இல்லை. அவன் உணர்ச்சியை இவை கிளர்ச்சியுறச் செய்ததில்லை.

ஆனால் போர்வீரர்கள் கூடியிருந்து குடிக்கும் இடத்திலே காணப்பட்ட அழுக்குப்படிந்த குட்டி ஒருத்தியைப் பற்றி அவன் சுவாரஸ்யமாக எழுதுவான். பசுமை படிந்த வயல்வெளிகளையும் தோட்டங்ளையும்விட இருண்ட சந்துகள் அவனுக்கு வசீகரமாகத் தோன்றின. உணர்வுக் கிளர்ச்சி ஏற்பட்டபோது வாய்ப்பாக எவளாவது சிக்கிய வேளையில் அவளோடு ஆனந்தம் அனுபவிக்க அத்தகைய இடங்கள் மிகுதியும் பயன்பட்டன அல்லவா!

மலர்கள் பயனுள்ள விஷயங்கள். எந்தச் சிங்காரியின் மனசையாவது தன் பக்கம் சுண்டி இழுக்க வேண்டுமானால், அறிமுக அன்பளிப்பாக வண்ண மலர்களை அவளுக்கு அனுப்ப முடியுமே.