பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தனின்

விமர்சனப் பார்வை

புதுமைப்பித்தன் முதன்மையாக ஒரு படைப்பாளி. அவர் இலக்கியவிமர்சகர் அல்லர். அவர் தீவிரமாகவும் சிரத்தையோடும் இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட்டதுமில்லை.

புதுமைப்பித்தனும் அவரது சமகால எழுத்தாளர்களும் முக்கியமாக சிறுகதைகள் எழுதுவதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள். வாழ்க்கை உண்மைகளைப் பிரதி பலிக்காத மேம்போக்கான பொழுதுபோக்குக் கதைகளே தமிழில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழ்ச் சிறுகதைக்கு ஆழமும் கனமும் புதுமையும் இலக்கியத்தரமும் சேர்க்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்கள் அவர்கள். அம்முயற்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

புதுமைப்பித்தனுக்கும் அவர் காலத்திய படைப்பாளிகளுக்கும் மணிக்கொடி என்ற பத்திரிகை தகுந்த எழுத்துத்தளமாகப் பயன் பட்டது. அந்த மாதம் இருமுறை இதழ் ஒரு காலகட்டத்தில் சிறுகதைப் பத்திரிகையாக மட்டுமே வெளிவந்தது. அது விமர்சனத்தை வளர்க்கவில்லை.

பொதுவாக, தமிழில் இலக்கிய விமர்சனம் ஒரு ஒதுக்கப்பட்ட துறையாகவே இருந்து