பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 3? பொதுவாக, ஒரு மொழியில் வெளிவந்துள்ள சிறப்பான எழுத்தை மேல்நாட்டு இலக்கியத்துடன் ஒப்பிடுவது எழுத்தாளர் களின் வழக்கமாக இருக்கிறது. அது படைப்பாளிக்கும், படைப்பைப் பற்றிப் பேசுகிறவருக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் தருகிறது என்று சொல்லலாம்.

ஆனால், புதுமைப்பித்தன் இதுபற்றி மாறுபட்ட ஒரு நோக்கு கொண்டிருந்தார். அவர் எழுதுகிறார்:

எழுதுகிறவர்களைக் கேட்டால், நம்முடைய இன்றைய சாதனையை மேல்நாட்டு இலக்கியங்களுடன் தைரியமாக ஒப்பிட வேண்டும் என்பார்கள். இது எதற்காகச் செய்ய வேண்டிய காரியமோ தெரியவில்லை. நம்மூர் நாயர் ஒட்டல் இட்லியையும் பரமசிவம்பிள்ளை ஒட்டல் தோசையையும் ஹன்ட்லி பாமர்ஸ் பிஸ்கோத்துடன் வெற்றிகரமாக ஒப்பிட்டு வெளிவரும் கருத்துக் களைக் காணப்பெறும் பாக்கியம் எனக்கு இதுவரை சித்திக்க வில்லை. இலக்கியத்துக்குள் தான் இக்கோளாறு.

புதுமைப்பித்தன், ஆரம்பகால நாவல்கள், சிறுகதைகள் குறித்து விமர்சன நோக்குடன் சில கருத்துக்கள் தெரிவித்திருக் கிறார். அவை அவருடைய ரசனையையும் இலக்கிய மதிப்பீட்டுத் திறனையும் புலப்படுத்துகின்றன.

தமிழ் நாவல்கள் பற்றி அவர் எழுதியுள்ள பகுதி: தமிழுக்குச் சிறுகதையும் புதிது. இதனால் அவ்வளவு உயர்ந்த இலக்கியங்கள் இருக்காது என்று எதிர்பார்ப்பது சகஜம். ஒரளவு உண்மை. தமிழ்நாட்டு நாவல்களை, இலக்கியத்தில் ஸ்தானம் பெறக்கூடிய நாவல்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம். வேத நாயகம்பிள்ளைதான் தமது பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவல் என்ற மேல்நாட்டுச் சரக்கைத் தமிழருக்கு அறிமுகப்படுத்து கிறார். இவரைத் தமிழ் நாவலின் தந்தை என்றே கூறிவிடலாம். அது, நாவலின் குறைகளை எல்லாம் தன்னுள் அடக்கியும். சுவை குன்றாமல் இருப்பதுதான் அதன் அழகு. அது உண்மையில் நம் நாட்டில் வழங்கிவரும் மரியாதைராமன், தெனாலிராமன் கதை களை ஒரே கதையில் திரட்டி வைக்கப்பட்டதுதான்.

இதே போல, இதர ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் பற்றியும் அவர் தனது கருத்தை வெளிப்படையாகக் கூறுகிறார். கமலாம்பாள் சரித்திரம் பற்றிய அவர் விமர்சனம் பின்வருமாறு உள்ளது.

ராஜமையரின் கமலாம்பாள் சரித்திரம் இதன் முற்பகுதி நாவல். பிற்பகுதி கனவு. ஹிந்து சமுதாயத்தில் எந்த அற்புதமும் சர்வசாதாரணம் என்று கருதப்படுவதினால்தான். நமக்கு அதன் சுவை கடைசிவரை குறையாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அந்த ஜீவப்பிரம்ம ஐக்கியம். வேதாந்தத்தில் அற்புத