பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னன் கட்டுரைகள் 33

தமிழ்ப்பண்புக்கு புதியவன். இதனால் பலர் நான் என்ன எழுது இறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். அந்தமுறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கைவிட்டு விட்டேன். காரணம், அது செளகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல. எனக்குப் பலமுறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்கவேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்" என்று புதுமைப்பித்தன் தனது எழுத்து பற்றி விவரித்திருக்கிறார்.

புதுமைப்பித்தன் விதம்விதமான முறைகளில் சோதனைகள் செய்து வெற்றிகண்டவர். கதைக்கான விஷயத்தைத் தேர்ந்து எடுத்து அதைக் கதையாகச் சொல்லும் முறையிலும் எழுதிச் செல்லும் விதத்திலும், நடையிலும், அவர் இறுதிவரை புதுமை செய்து கொண்டே இருந்தார் என்று சொல்லலாம். அவரது கடைசிக் கதையான கயிற்றரவு இதற்குச் சான்று கூறும்.

உலக இலக்கியவளர்ச்சியை நன்கு கவனித்து, சிறுகதைப் போக்குகள் பற்றிச் சிந்தித்து, அவ்வழிகளில் தமிழ்நாட்டின் மக்கள் வாழ்க்கை, அவர்களுடைய மனநிலைகள் சம்பந்தமான புதுமைக் கதைகளை அவர் எழுதினார். அவருடைய கதைகளில் அநேகம் கதைகளே இல்லை, வெறும் ஸ்கெச்சஸ் வாழ்க்கை பற்றிய சொற் சித்திரங்கள்தான், என்று விமர்சகர்கள் கூறுவது சகஜமாக இருக்கிறது. உலக இலக்கியப் போக்கின்படி அவ்விதமான எழுத்துக் களும் சிறுகதைகளே ஆகும்.

புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்து வேண்டுமென்றே கையாண்ட உத்திகளில் இந்தப் போக்கும் அடங்கும். இதற்கு அவருடைய வார்த்தைகளே சான்று.

"அவற்றில் கதைக்கு உரிய கதைப்பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம் முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மை யாகக் கிடையா. மனஅவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக்கொள்வதானால் அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல்நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை முதல்முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப்பின்மை என்னுடையதாகும்" என்பது அவர் கூற்று. -

"பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப் பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன் திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்துவரும் கொடுமைகளையும் அநீதிகளையும் சமூகத்தின் வக்கிரவிசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மனஇருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க் கனவுகளாகும்" என்றும் அவர் தனது கதைகள் பற்றிக் குறிப் பிட்டிருக்கிறார்.