பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்லிக்கண்ணன் கட்டுரைகள் §3

డి

சம்பந்தமான கட்டுரைகளே அதிகம் வெளிவரும். இவை தவிர, தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய ஒரு சில கதைகளும் வந்துள்ளன. மஞ்சேரி எஸ். ஈஸ்வரன் ஆங்கிலத்தில் எழுதி தி.ஜர. தமிழாக்கி வெளியிட்ட கதைகள் குறிப்பிடத் தகுந்தவை.

தி.ஜ.ர. மஞ்சரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, சுப. நாராயணன் சக்தியின் துணைஆசிரியரானார். தி.ஜ.ர. மிதவாதப் போக்கு உடையவர். மைல்டாக இருக்க வேண்டும் எழுத்தில் ரெஸ்ட்ரெய்ன்டாக இருக்கவேனும் என அறிவுறுத்தும் இயல்பினர். அவருடைய நோக்கிற்கு ஏற்பவே கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துக்கொண்டிருந்தார். சு.ப. நாராயணன் சக்தியின் உள்ளடக்கத்தில் தீவிரத்தன்மை புகுத்தினார். சிறிது காலத்துக்குப் பிறகு, சுப.நா விலகிவிடவும், கு. அழகிரிசாமியும் தொ.மு.சி. ரகுநாதனும், சக்தியின் பொறுப்பை ஏற்று நடத்தினர். சக்தி டைஜஸ்ட் பாணிப் பத்திரிகையாகத் தான் இருந்தது.

1950 வாக்கில் வை. கோவிந்தன் சக்தி மாதப் பத்திரிகையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். சக்தி மலர் என்ற பெயரில் மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டார். கு. அழகிரிசாமி, ரகுநாதன் பொறுப்பில் உருவான இத்தொகுப்புகள் அருமையான இலக்கியக் களஞ்சியங்கள் ஆகும். அவைகூட ஒன்பது மலர்களே வந்தன.

சிறிது இடைவேளைக்குப் பிறகு சக்தி மீண்டும் உயிர் பெற்றது. அதற்கு வி. விஜயபாஸ்கரன் துணைஆசிரியர் ஆனார். இப்போதும் சக்தி நீடித்து நிற்கவில்லை.

1955 மே மாதம் விஜயபாஸ்கரன் சொந்தமாக சரஸ்வதி பத்திரிகையை ஆரம்பித்தார். சரஸ்வதி முற்போக்கு இலக்கியப் பத்திரிகை ஆகும்.

சரஸ்வதிக்கு முன்னர் தமிழில் தோன்றிய முற்போக்கு இலக்கியப்பத்திரிகை சாந்தி, அதை தொ.மு.சி.ரகுநாதன் திருநெல் வேலியில் ஆரம்பித்து நடத்தினார். சாந்தி 1954 டிசம்பரில் துவக்கப்பட்டது. சொத்தைக்கருத்துகளும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும், வெற்றிக் காசுக்கும் சுதேசியச் சிறுமைக்கும் இருதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலகத் துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாஷைவளத்தையும் இழிவுபடுத்தும் நாசக்கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும் இனிமையும் புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டி களை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு தோன்றிய சாந்தி 1955 ஏப்ரல்வரை நடந்தது. சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டிசெல்வராஜ் ஆகியோரின் சிறுகதைகள் சாந்தியில் வந்தன. மலையாளச் சிறுகதைகளை சுந்தரராமசாமி தமிழாக்