பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வல்லிக்கண்ணன் யோகநாதன் கதைகள், கிருஷ்ணசந்தர் என்ற இந்தி ஆசிரியரது படைப்புக்களின் மொழிபெயர்ப்பு முதலியவற்றை வெளியிட்டது. தமிழகத்திலிருந்து பொன்னிலன் கவிஞர் பாப்ரியா, ருத்ரய்யா ஆகியோரின் எழுத்துக்களும் இதில் பிரசுரமாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து 1981இல் வெளிவந்த மற்றுமொரு பத்திரிகை கிருதயுகம் ஆசிரியர் க. வீரகத்தி. ஊனுயிர் நான் உளவரைக்கும் ஒருலக சென்றே பாடி மானுட நேசிப்பை வளர்ப்பேன் என்பதை புன்னகை ஆக்கும் இவ்வரிகளை இலட்சிய எண்ணமாகக் கொண்டிருந்தது. போராசிரியர் கைலாசபதி ஒரே உலகம் பற்றி எழுதிய கட்டுரை, சரியான இடத்தில் சரியான சொல்லைப் பயன்படுத்தக்கூடிய சீரான மொழியாட்சியை வலியுறுத்தி முனைவர். சாலை இளந் திரையன் எழுதிய கட்டுரை, மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் பற்றி முருகையன் எழுதிய கட்டுரை, மற்றும் காவலூர் ஜெகநாதன் கதை, சில கவிதைகள், சீனாவில் பணிபுரியும் திருமதி. ராணி சின்னத்தம்பியுடன் ஒரு பேட்டி, பாரதி நூற்றாண்டு விழா 1982 என்று தலையங்கம் . இவை இந்தப் பத்திரிகையின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் விதத்தில் இருக்கின்றன. கிருதயுகம் எத்தனை இதழ்கள் (எத்தனை காலம்) வெளிவந்தது என்று தெரியவில்லை.

பூரணி, அலை, கவிஞன் என்று சில இலக்கியப் பத்திரிகைகள் வந்ததாகவும், அவை இலக்கியவாதிகளின் கவனிப்புக்கும் பாராட்டு தலுக்கும் உரியனவாக இருந்தன என்றும் தெரிய வருகிறது. இவற்றின் பிரதிகள் என் பார்வைக்கோ, என் நண்பர்கள் பார்வைக்கோ கிடைக்கவில்லை.

இலங்கையில் பிரசுரமான சிறுபத்திரிகைகளில் - சிறிது காலஅளவே வாழ்ந்த போதிலும் - முக்கியகவனிப்புக்கு உரிய தாகி, ஏதோ சிலவகைகளில் தாக்கங்கள் ஏற்படுத்திய வெளியீடு களில், தீர்த்தக்கரைக்கு முக்கிய இடம் உண்டு.

காலாண்டு ஏடாக வெளிவந்த தீர்த்தக்கரை ஐந்து இதழ்கள் தான் பிரசுரம் பெற்றது என்று ஒரு இலக்கிய ரசிகர் குறிப்பிடுகிறார். மலையகத்தின் இளைய தலைமுறையைச் சார்ந்த புத்திஜீவி வட்டத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்த சஞ்சிகை தீர்த்தக்கரை, இலக்கிய வட்டத்திற்காக எல். சாந்திகுமாரை ஆசிரியராகவும்