பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 வல்லிக்கண்ணன் கதைகள்

தான் ஆகணும்...' தயக்கம் அவர் பேச்சுக்குத் தடை போட்டது.

சந்திரனின் உள்ளத்திலே இனம் புரியாத ஒரு கலக்கம் புகுந்தது. "சும்மா சொல்லுங்க, மாமா! ஏதாக இருந்தால் என்ன?" என்றான்.

"சேதுராமன் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறான்...” -

'அட பைத்தியக்கார மனுஷா இதுக்கா இவ்வளவு பீடிகை! என்னமோன்னு நான் பயந்து விட்டேனே!' என்று கூறவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

மாமா தொடர்ந்து பேசினார்: "கல்யாணம் செய்து கொள்வது என்றால், காந்திமதியைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவளை எனக்குத் தர இஷ்டமில்லையென்றால், இந்த வருஷமும் எனக்குக் கல்யாணம் கிடையாது; இன்னும் அஞ்சாறு வருஷத்துக்கும் நடக்காது. சந்திரனுக்கும் இப்போ நடக்க முடியாது; அவன் தண்டச் சோறு தின்றுவிட்டு ஊரைச் சுற்றி வருகிறான்; அவன் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?' என்று சொன்னான். அவன் பிடிவாத குணம்தான் உனக்குத் தெரியுமே! காந்தி மீது உனக்குத்தான் பிரியம் கிடையாதே என்று சொன்னேன். 'யார் அப்படிச் சொன்னது? அவ சின்னப் பிள்ளையாக இருந்தபோது - பம்பை பரட்டையாகத் திரிந்தபோது, அவளை நான் அலட்சியமாகப் பார்த்திருப்பேன். போன வருஷம் காந்தியைத் தற்செயலாக நான் பார்க்க நேர்ந்தது. குத்துவிளக்கு மாதிரி இருக்கிறாள் என்று தோன்றியது. அவள் என் மாமா மகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டன. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள எனக்கு உரிமை இல்லையா என்ன?' இப்படி எவ்வளவோ சொன்னான்’’.

“சரி. நீங்கள் என்ன சொன்னிர்கள்?" என்று சந்திரன் கேட்டான். -

"நான் என்னத்தைச் சொல்றது?" எனத் தயங்கினார் பெரியவர்.

"அண்ணனுக்கு முடிவாக என்ன சொன்னிர்கள்?" மாமாவின் தீர்மானத்தை அறியத் தவித்தான் அவன்.

"அவன் அப்படிப் பிடிவாதமாகப் பேசுகிற போது நான் என்ன செய்வது, சந்திரா? காந்தியை எவ்வளவு வருஷங்கள் கன்னியாகவே வைத்துக் காப்பாற்ற முடியும்?...”