பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பீரஜன்னி 195

பயப்படுவான். அதற்கு ஈடு செய்வது போல் அவன் எண்ணங்கள் சித்து விளையாடல் புரியும்.

'ஏயா, ரோட்டிலே போறவரே! ரோடு என்ன உம்ம வீட்டுத் திண்ணையா? பேவ்மெண்டிலே ஏறி நட!' உத்திரவிட உரிமை பெற்றோரின் அதிகாரக் குரல் கனத்து ஒலிக்கிறது.

கைலாசம் பதறி அடித்து நடைபாதைக்குத் தாவுகிறான். அவன் எண்ணம் கொதித்துக் கூத்திடுகிறது. “சரிதாம் போய்யா! உம்ம ஊரு தடை பாதைகள் இருக்கிற லெட்சணத்துக்கு, அதுலே நடக்காதது தான் பெரிய குறையாப் போச்சுதாக்கும்! நீரு இறங்கி வந்து, தெருத் தெருவா நடந்து பார்த்தால் தானே உமக்குத் தெரியும்!"

அப்படியும் இப்படியும் புரளும் கைலாசப் பார்வை துரத்தில் வரும் ஒரு நபரை இனம் கண்டு கொள்கிறது. கடன்காரன்! இவனுக்கப் பத்து ரூபாய் கடன் கொடுத்தவன்.

- பிரமாதக் காசு! தா, தா, எப்ப தருவே என்று நச்சரித்துக் கொண்டு. கையிலே பணம் இருந்தால் திருப்பிக் கொடுத்து விட மாட்டேனா என்ன? மனுசனுக்கு இது தெரிய வேணாம்?

கைலாசம் பக்கத்துச் சந்தில் பாய்கிறான். கிளை வழிகள் பல அவனுக்கு அத்துபடி ஆள் மாயமாய் மறைந்து விடுவானே. அவன் எண்ணங்கள் பறக்கின்றன.

'இந்தா ஸார் பத்து ரூபாய்! உங்களுக்குப் பணம் அதிகமாகத் தேவைப் பட்டாலும் கேளுங்க. தாறேன். ஐயாவாள் கிட்டே இப்போ பணம் நிறையவே இருக்குது!’

ஏகப்பட்ட மணியார்டர் பாரம் வாங்குகிறான். தெரிந்தவர், உறவினர், என்றோ உதவி கோரியவர் என்று பலப் பலருக்கும் இஷ்டம் போல் பணம் அனுப்புகிறான் கைலாசம்.

'எல்லாரும் பிரமிக்கணும். எதிர்பாராது பணம் கிடைத்து, ஆச்சர்யப்படுவார்கள். பிறகு சந்தோஷப்படுவார்கள்!'

ஆகா, எண்ணங்கள் எவ்வளவு இனியன! எத்தனை சக்தி வாய்ந்தவை! -

தடியன் ஒருவன் இடித்துக் கொண்டு போகிறான். 'ஏய், என்ன கணாக் கண்டுக்கினு நடக்கிறியா? நேரே பார்த்துப் போ!' என்று உபதேசம் வேறு புரிகிறான். -

ஒகோ, இவ்வளவுக்கு இருக்குதா உனக்கு? கைலாசம் லேசாகத் தள்ளுகிறான். டமால்! தடியன் சாம்பல் பூசணிக்காய் மாதிரி விழுந்து சிதறுகிறான்.