பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 1 வல்லிக்கண்ணன் கதைகள் அது ஒரு செவ்வாய்க்கிழமை. அதன் பிறகும் மூக்க பிள்ளை வெளியே தலைகாட்ட வில்லை. அடுத்த செவ்வாயன்றும் பாலுப்பிள்ளை போய் அவ ரைப் பார்த்துவிட்டு வந்தார். போன தடவையைவிட இப்போது அண்ணாச்சி மெலிந்து போயிருந்ததாகத்தான் அவருக்குத் தோன்றியது. அவர் கொடுத்திருந்த பொடியை யும் பெரியவர் சாப்பிடவில்லை. "இப்படிக் கிடந்தால் உடம்பு எண்ணத்துக்காகும்? என்று கண்டித்து, வேறு சில மாத்திரைகளும் சூரணங் களும் கொடுத்துவிட்டு அவர் திருப்தியோடு வீடு வந்து சேர்ந்தார். அண்ணாச்சி அவ்வளவுதான். அவர் நம்பு கிற சுக்கும் சுப்பிரமணியசாமியும் எத்தனை நாளைக்குக் கை கொடுக்கும்.கிறதையும் பார்த்துப்போடுவோமே!’ என்று முனகிக் கொண்டார். பாலுப் பிள்ளையின் அனுபவ ஞானமும் அனுமானமும் மூக்க பிள்ளை விஷயத்தில் மண்ணைக் கவ்வின. ஆனந்தக் குறிச்சி வாசிகளுக்கே இது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பாலுப்பிள்ளை இரண்டு தடவைகள் போய்வந்த பிறகும் உயிரோடு இருக்கிறார் என்றால், அவருக்கு வலுத்த உயிர்தான் என்று பலரும் பேசிக் கொண்டார்கள். பாலுப் பிள்ளைக்கே இது மனசை உறுத்தத்தான் செய்தது. ‘அண்ணாச்சி இன்னும் அஞ்சு வருஷம் இருந்து நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடி. நாமெல்லாக் அதைப் பார்க்க வேண்டாமா என்ன? அவாள் அவசரப் படமாட்டாக என்று பெரிய பிள்ளையைப் பற்றி விசாரித்த வர்களிடம் எல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருந்த