பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 160 சாத்தப்படவில்லை. உள்ளே இருந்து விளக்கொளி இடை வெளி வழியாகத் தெருவை எட்டிப்பார்த்தது. அவன் களுக்குச் சிரிப்பை எறிந்தான். கால்களை வேகமாக எட்டிப் போட்டான்...... தன்பின்னால், தன் மீது கண் பதித்தபடி யாரோ நிற்பதாக உணர்வுகள் எடுத்துச் சொல்லவே, டாக்டர் மாதவன் திரும்பிப் பார்த்தார். கதவை தாளிடாமல் விட்டது தப்பு’ என்றது அவர் மனம். - அவர் பார்வை அறிமுகம் செய்து வைத்த தோற்றம் அவரைச் சற்றே திடுக்கிடச் செய்தது. பிசாசோ என்ற மயக்க நினைப்பு ஒருகணம். மனித உருவம்தான் என்று தெளிந்தது அறிவு. விநோதமான உடலமைப்பு, விசித்திர மான முகத்தோற்றம் என்றது மனம். எனினும் அவர் முகம் சலனமற்ற தன்மையையே காட்டியது. டாக்டர் மாதவன் மனத்துணிவு பெற்றவர். எந்த நெருக்கடியையும் திறமையாகச் சமாளிக்கும் சாதுர்யம் உடை யவர். எதிரே இருப்பவர்களைப் பார்வையால் எடைபோடும் திறமை உள்ளவர். அவனைப் பார்த்ததுமே அவன் நல்ல எண்ணத்தோடு வரவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. அவன் கண்க ளிலே அவர் குரோதத்தையும் கொலைத்துடிப்பையும் மாத் திரமே கண்டாரில்லை. அக்கண்களின் கரிய ஆழத்திலே, அவனுடைய உள்ளச் சுழிப்பின் சிற்றலைகள் படிந்து பிரதி பலிப்பதையும் கண்டார். அவனைப் புரிந்து கொண்டவர் போல் தலையசைத்தார். அவன் நின்றான். வெறிநாய் பாய்வதற்கு முன் பார்த்து நிற்பது போல.