பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 8. அவள் அவனுக்குச் சொந்தக்காரியும் கூட. சரியான வாயாடி. குறும்புத்தனம் மிகுந்தவள். நாகரிக மோகம் அவளைப் பிடித்திருந்தது. அவளும் அந்த கும்பலோடு சேர்ந்து வந்தாள். அவனைக் கண்டதும் காத்தலிங்கம், ‘என்ன, அக்கா -- & $ * 冷 κ» ?> மகளே, சொக்காய்க்காரி வெத்திலை வைச்சிருக்கியா? என்று கேட்டான். 'இல்லையே! என்று கையை அசைத்தாள் அவள். தன் தோழிகளைப் பார்த்து, "நீங்க எல்லாம் கூகை பார்த் திருக்கிறீங்களா? என்றாள். - "கூகையா?" என்று ஒன்றிருவர் கேட்டு வைத்தார்கள். பாராதவங்க இங்கேயே பார்த்துக் கொள்ளலாம் என்று மீனாட்சி காத்தலிங்கத்தைச் சுட்டிக் காட்டியபடி கலகல் வெனச் சிரித்தாள். 'என்னா புள்ளே என்னா? உனக்கு எப்படி வருது?’ என்று அவன் முறைத்தான். அவள் சிரித்தபடி சொன்னாள் : கூகை என்ன செய் புது ? பகல் நேரத்திலே பொந்துக்குள்ளே பம்மியிருக்கும். சாத்திரி ஆனதும் வெளியே புறப்படும். ஊர் நெடுகச் சுற்றி வரும். அது மட்டுமா ? எல்லாருக்கும் பயம் கொடுக்கிற குரலிலே ஹாவோ -ஹாவோன்னும் கத்தும். நீயும். அதையே தான் செய்றே. சரியான மனிசக் கூகை நீ!’ அவளோடு சேர்ந்து சிரித்தார்கள் மற்றப் பெண்கள். என்ன செய்வது? அவனும் சிரித்தான். ஒக்கச் சிரித்தால் வெக்கமில்லே. அப்படித்தானே மாமா?’ என்று கேட்டாள் அவள்.