பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 182 'அக்கம் பக்கத்து ஊர்களில் தேசியக் கொடியை உயர மான இடங்களில் கட்டிப் பறக்க விட்டிருக்கிறார்கள். நாமும் நம் ஊரில் அப்படிச் செய்ய வேண்டும்’ என்று அண்ணாச்சி ஒருவர் ஒரு நாள் சொன்னார். எங்கே கட்டலாம் என்ற யோசனை தலைகாட்டியது. கோயில் கோபுரத்தின் மீது கட்டலாம் என்றனர் சிலர். அந்த ஊர் கோபுரம் சாதாரணமானது; உயரம் இல் லாதது. பெயருக்கு ஒரு கோபுரம் என்று காட்சி அளித்துக் கொண்டிருந்தது அது. ... " 'அதன் மீது கொடியைக் கட்டுவதும் நம்ம வீட்டுமாடி மீது கம்புநாட்டிக் கொடியை பறக்கவிடுவதும் ஒண்ணுதான். உயரம் பற்றாது’ என்றார் அண்ணாச்சி. கோயிலுக்கு எதிரே சிறிது தூரத்தில் ஒரு வெட்டவெளி, அதில் பெரிய அரசமரம் ஒன்று நின்றது. ஓங்கி வளர்ந்து நின்ற அந்த மரம் தனது எண்ணற்ற குச்சிக் கைகளிலும் ஆயிரமாயிரம் இலைகளை ஏந்தி வானவீதியைப் பெருக்க முயல்வதுபோல் சதா சலசலத்துக் கொண்டிருந்தது. 'இந்த மரத்தின் உச்சாணிக் கிளையிலே, ஓங்கி வளர்ந்த மூங்கில் ஒன்றை இறுக்கிக் கட்டணும். அந்த மூங்கில் உச்சி யிலே நம்ம கொடி பறக்கணும். உதயசூரியனின் பொற் கதிரிலே அது பளபளக்கும். அந்தி நேர வெயிலில் கொடி தகதகக்கும். பகல் பூராவும் பளீரென அது ரொம்ப தூரத்துக் குத் தெரியும்’ என்று அண்ணாச்சி அளந்தார். "உயரமான இந்த மரத்தின் உச்சிக்கு ஏறி, கிளையிலே பலமாக யார் கொடிக் கம்பைக் கட்ட முடியும்?' என்று மற்ற வர்கள் மலைத்தார்கள்.