பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகைகளும் நடிகர்களும் கதைகள் எழுதுவதாகவும் கேள்விகளுக்கு பதில் சொல்வதாகவும் விளம்பரப்படுத்தி தங்களுடைய பத்திரிகைகளின் விற்பனையைப் பெருக்கிக்

கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள்.

புகழ் பெற்ற நடிகைகளும் நடிகர்களும் எழுதிய கதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் என்று பத்திரிகைகள் வெளியிடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை பெயர் குறிப்பிடப்படும் நடிகைகள் அல்லது நடிகர்களால் எழுதப்படுவதில்லை. Ghost writing என்கிற முறை தான். அவர்களுக்குப் பதிலாக வேறு எவராவது எழுதி விடுவது தான் வழக்கமாக இருக்கிறது.

பத்திரிகை ஆசிரியர் குழுவில் பணி புரியும் திறமையாளர்களில் எவராவது ஒருவர் இத்திருப்பணியை வெற்றிகரமாகச் செய்வது தான் பத்திரிகை உலக நியதி ஆகும்.

அச்சில் அவற்றைப் பார்க்கிற சாதாரண வாசகர்கள் அவை எல்லாம் தங்களது அபிமான நட்சத்திர நடிகைகளாலும் நடிகர்களாலும் எழுதப் பட்டவையே என்று எண்ணிக் கொள்வதும் இயல்பாக நடக்கிறது.

நடிகர்களிலும் நடிகையரிலும் , எழுதக் கூடிய திறமை பெற்றவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அபூர்வ கேஸ்’கள். x

இ. வாசகர்களும் விமர்சகர்களும் 148