பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 டிருக்கிருன் ஒரு தப்பு யாராலாவது சொல்ல முடியுமா? வயசு வந்த ஒரு பெண் வலுவிலுே கோணல் மாணலாக நடந்து கொண் டால் எத்தனேதான் நல்லங்ைைலும் கட்டாயம் புத்தி தடுமாறித் தான் போவான். நாளைக்கு நாலு பேர் கைகெர்ட்டிச் சிரிக்கிற காலம் வந்தால் அப்போது, முன்பே ஒரு வார்த்தை சொல்லுவதற் கென்ன? என்று நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் புருஷர். வயல், வெளி, அது இது என்று போய்விடுகிறீர்கள். இங்கே நடப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்-' சுந்தரேசன் சர்ப்பம் சீறுவது போல மீண்டதோர் பெரு மூச்செறிந்தார். அவர் உள்ளம் மனிதர்களின் மன கில்ேகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டிகுந்தது. இஞ்செக்ஷன் மூலம் ஏறிய மருந்து நாடி ரம்புகளில் பரவுவதுபோல லட்சுமியின் அழுத்த மான சொற்கள் அவர் மூளேயிலே புகுந்து அதைக் கலக்கிக் கொண்டிருந்தது. அவள் மூச்சு விடாமல் மேலும் மேலும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சரி. போதும். என்னேப் போட்டுத் தொணப்பாதே. துரங்கு. காலையில் பேசிக் கொள்ளலாம்-’ என்ருர் சுந்தரேசன். கணவன் இப்படி வெடுவெடுப்புடன் கூறியதும் லட்சுமி டப்பென்று வாயை மூடிக்கொண்டாள். ஆனல் ராஜத்தின் உள். ளமோ? பட்டென்று உடைந்து அவள் கண் மடையைத் திறந்து விட்டது. குமுறிக் குமுறி அழுதுகொண்டே படுத்துக் கிடந்தாள். இரவு சென்றது. மறுநாள் மாலை. விளக்கு வைக்கும் நேரம். சுந்தரேசன் தெருக்கோடியில் உள்ள கிராமக் கணக்கர் வீட்டுக்குப் போயிருந் தார். லட்சுமி செளதாமினியை அழைத்துக்கொண்டு கோவிலுக் குச் சென்றிருந்தாள். வேணு வந்தான். முதற் கட்டில் யாரை யும் காணவில்லே. இரண்டாங்கட்டுக்குச் சென்றன். அங்கும் யாரும் இல்லாது போகவே தோட்டத்துப் பக்கம் செல்ல கினேத்து நடைவழியே போய்க்கொண்டிருந்தான். அப்போது தோட்டத் திலிருந்து உள்ளே வந்தாள் ராஜம். கொல்லேக் கதவைச் சாத்திக் கொண்டு திரும்பினபோது மங்கலான ஒளியில் வேணு வருவதை உணராது அவனைச் சமீபித்து அவன் மீது முட்டிக்கொள்ளப் போனுள். சட்டென்று சமாளித்துக்கொண்டு இரண்டடி பின் வாங்கிள்ை, உடனே தோட்டத்துக் கதவைத் திறந்துகொண்டு கொல்லப் பக்கம் செல்ல கினைத்தாள். ஆனல் அவள் கதவைத் 'திறந்ததும் வேனு கொல்லேப் புறமாகச் செல்லவும் அவள் சட்