பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9
திருச்சியில் மீண்டும் சிறை

திருச்சிராப்பள்ளிக் கோட்டை, மேற்கு வாசல், அன்று மாலையில் விறுவிறுப்பான நிலையில் காணப்பட்டது. கோட்டை அரங்கத்தின் மேலே அமர்ந்திருந்த போர் வீரர்கள் ஏனைய வீரர்களை உஷார்ப் படுத்தும் வகையில் குழல்களை ஊதினர். தெற்கே விராலிமலை திசையிலிருந்து குதிரைப்படை அணி ஒன்று திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. நொடி நேரத்தில் ஆங்காங்கு இருந்த வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களுடன் கோட்டை வாயிலில் அணிவகுத்து நின்றனர்.

மீண்டும் குழல் ஒலித்தது. அதன் ஒலியிலிருந்து அச்சப்படத் தக்கது ஒன்றும் இல்லையென்றும், மரியாதை செலுத்தும் வகையில், வீரர்களது அணிவகுப்பு இருக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டது. மேலுார் கோட்டைக்குச் சென்றிருந்த திருச்சி தளபதி பிலாயிட்டின் குதிரை அணிதான் வந்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் நீலத் துணியில் வெள்ளை சிவப்பு வண்ண குறுக்குக் கோடுகள் இட்டு இங்கிலாந்து நாட்டு அரசு சின்னமான சிங்கமும் குதிரையும் வரையப் பெற்ற பெரிய கொடி ஒன்றினை தாங்கிப்பிடித்த வீரனது குதிரையைத் தொடர்ந்து பல குதிரை வீரர்கள் மெயின் கார்டு வாயில் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர். அவர்களை அடுத்து, பரங்கித் தளபதி பிலாய்ட்டும் அவரை தொடர்ந்து, இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் அவரது பணியாட்களும் இருபது குதிரைகளிலும் ஒரு ஒட்டகத்திலும் கோட்டைக்குள் நுழைந்தனர்.[1]

அதே அகழி, உச்சிப் பிள்ளையார் கோவில், ஆற்காட்டு நவாப் அரண்மனை, கவனத்து மைதானம் அவைகளை அடுத்து வரிசை வரிசையாக பழைய கட்டிடங்கள். பதினான்கு ஆண்டு


  1. Revenue Consultations, 62 A, 24-3-1795, p. 1118