பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விந்தன் இலக்கியத் தடம் வாழ்த்தி, தமிழை வளப்படுத்த வேண்டும் - தமிழ் நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம்; இதுவே என் இருபது வருட கால எழுத்து.' 'விந்தன் கதைகள்’ என்ற நூலில் தமது இலக்கிய நோக்கம் பற்றி, மேற்கண்டவாறு அவர் பிரகடனம் செய்துள்ளார். ‘சமுதாய விரோதி என்ற தமது சிறுகதைத் தொகுப்பில் விந்தன் இவ்வாறு கூறுகிறார் : "ஒரே வார்த்தையில் சொல்வதானால், நம் உழைப்புக்கேற்ற மதிப்பு - அந்த மதிப்பைப் பெறுவதற்குத்தான். நாம் இன்று கடவுளுடன் போராடுகிறோம்; மதத்துடன் போராடுகிறோம்; கலையுடன் போராடுகிறோம் இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழ வேண்டும் - என்று உறுதியுடன் முழங்குகிறார் விந்தன். எனவே, போர்க் குனம் மிக்க மனிதாபிமான எழுத்தாளர், கொள்கைப் பிடிப்புள்ள பேனா வீரர், பாரதியின் சீரிய வழித் தோன்றல் என்று நாம் விந்தனைப் பாராட்டலாம்; 'விந்தனுடைய படைப்புக்களில் புதுமைப் பித்தனை விட மிக அதிகமான அளவிற்கு ஒரு சத்திய ஆவேசமும், சமுதாய உணர்வும் இருப்பதைக் காண முடியும்’ என்று விமர்சகர் எஸ். தோதாத்ரி கூறுகிறார். இது ஒரு சரியான மதிப்பீடு என்பதில் ஐயமில்லை. 'முல்லைக்கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி: 'விந்தன் சிறுகதைகள ஆகிய தொகுப்புக்களைப் படித்துப் பாருங்கள்; தோதாத்ரி கூறுவது உண்மையென விளங்கும். புதுமைப்பித்தனை விட மிக அதிகமான அளவுக்குச் சத்திய ஆவேசமும், சமுதாய உணர்வும் கொண்டவராக விந்தன் இருப்பதற்குக் காரணம் என்ன? விந்தன் ஒரு பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்; உழைப்பாளர் குடியில் பிறந்தவர் பள்ளியில் அதிகம் படிக்காதவர் உழைப்பாளியாக - அச்சுத் தொழிலாளியாகத் தமது வாழ் வைத் தொடங்கியவர்; உழைப்பாளி மக்களை எப்போதும் நேசித்தவர்; அவர்கள் எல்லா வகையிலும் உயர வேண்டும் என்று சதா கனவு கண்டவர்;