பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 101 எழுத்தாளர்கள் ஜமீன்தார்களையும் பணக்காரத் தம்பதிகளையும் மேட்டுக் குடியினரையும் மட்டுமே கதாபாத்திரங்களாகக் கொண்டு கதைகள் எழுதி வந்த காலத்தில் விந்தன் நாற்பதுகளின் தொடக்கத்தில் ஏழை எளியவர்கள் ஒடுக்கப் படுகின்ற வர்கள், ஒதுக்கப்படுகின்றவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகளை எழுத ஆரம்பித்தார். முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ் போன்றவர்கள் மட்டுமே ஆங்கிலத்தில் தொட்டுக் காட்டி வந்த சில சமுதாய உண்மைகள் அக்கால தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தீண்டத்தகாதவையாக ஒதுக்கி வைக்கப்பட்டன. ( கல்கி கூறும் காரணம்) தேசிய இலக்கியம், மதுவிலக்குப் பிரச்சார இலக்கியம், தாசி ஒழிப்பு இலக்கியம் என்ற பெயரில் கதைகள் வந்துகொண்டிருந்தன. மக்கள் எழுத்தாளர் விந்தன்தான் தமிழில் தலித் இலக்கியத்தின் தந்தை-முன்னோடி என்று கொள்ளத் தகுந்தவர் என்று நான் துணிந்து கூறுவேன். அவர் 1963 ஆம் ஆண்டில் தம்முடைய ஏமாந்துதான் கொடுப்பீர்களா என்ற சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் தம்மைபற்றிக் கூறுவது இங்கே நம் கருத்துக்கு உரியதாகும். 'இப்போதெல்லாம் எழுத்தாளர்களில் பலர் ஏழை எளியவர்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் - எழுதுகிறார்கள். ஹை சர்க்கிளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் இலக்கிய உலகத்தில் ஓரளவுக்கு மதிப்பும் மரியாதையும் பெறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்தவர்களில் அடியேனும் ஒருவன் என்ற முறையில் இப்போது நான் பெருமைப்படுகிறேன்; அந்தப் பெருமையால் ஏற்பட்ட மனநிறைவுடன் நான் அவர்களை வரவேற்கிறேன்; அவர்கள் வாழ, வளர, வாழ்த்தும் கூறுகிறேன்.” "அவர் படைத்துள்ள பாத்திரங்கள் தலித் என்ற கருத்தின் பெருவட்டத்திற்குள் அடங்கக் கூடியவர்கள். அரிஜனங்களைப் பற்றி மட்டுமல்லாமல் அத்தகையரோடு ஒடுக்குதலுக்கு ஆளாகி வந்தவர்களை ஓரினப்படுத்தி அவர்களைப் போராட வேண்டியவர்களாக அதே நேரத்தில் போராடத் தெரியாதவர்களாக அவர் காட்டியிருக்கிறார்.