பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 103 ‘இதென்னடா வேடிக்கையா இருக்குதே! கடையாவது வைச்சுப் பிழைத்துக் கொள்வதற்குக் கூடவா உனக்கு உரிமை இல்லை? ‘ஏதுங்க? யோசித்துப் பார்க்கப்போனா எனக்கு இருப்பது ஒரே உரிமை தானுங்களே’ "அது என்னடா ஒரே உரிமை? "வேறே என்னங்க, தற்கொலை செய்து கொள்ளும் உரிமைதானுங்க அது! இந்த உரையாடலுக்குப் பிறகு கதையை இப்படி முடிக்கிறார் விந்தன். 'அவன் கண்களில் நீர் சுரந்தது. பாவம், அதற்குக் கூட உரிமை இல்லை, என்னும் விஷயம் அவனைப் போன்ற அப்பாவிகளுக்கு எப்படித் தெரியும்? இந்தத் தலித் கதையில் அப்பாவி தலித்தை ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். ஒதுக்கப்படுகிற, அவமதிக்கப்படுகிற, ஆளுமை ஏற்கப்படாத அப்பாவி தலித். ஒடுக்குதலை வாய்மூடி ஏற்றுக் கொள்வதோடு தன்னைத் தானே தரக்குறைவாக மதித்துக் கொள்கிற தலித். டீக்கடையில் மற்றவர்களைப் போல டீ வாங்கிக் குடிக்க அவனுக்கு உரிமை கிடையாது. ரொட்டிக் கடை வைத்து விற்கவும் உரிமை கிடையாது. ‘யோசித்துப் பார்க்கப் போனா எனக்கு இருப்பது ஒரே ஒரு உரிமை தானுங்க” என்கிறான். அந்த யோசனை ஆழ்ந்து சொல்லவில்லை. நம்பிக்கையை நோக்கிச் சொல்லவில்லை; இழிவையும் இழப்பையும் ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. விந்தன் இந்தக் கதையை எழுதிய காலத்தில் இருந்த நிலை அது. யோசனை நெறிப்படுத்தப் படாத காலம். சமுதாய நல நாட்டம் கொண்ட சீர்திருத்த வாதிகளால் மட்டுமல்ல, இலக்கியப் படைப்பாளர்களாலும் கூட, நீ உரிமைகளோடு பிறநத வன். விலங்கை ஒடித்தெறியப் போராடு - உரிமை வாழ்வுக்காகப் போராடு, என்ற உந்துதலைத் தர அவனுக்கு யாரும் இல்லை. (மாதவையா - சத்தியாந்தன்)