பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விந்தன் இலக்கியத் தடம் அமைதியும், காரிய சாதனையும் கொண்டவர்கள் மாலினி என்ற கதையில் வருகின்ற பாரிஸ்டர் பராங்குசத்தின் ஒரே மகள் மாலினியும், அன்பின் அடையாளம் என்ற கதையில் வரும் உமாவும், தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக எவரிடமும் தெரிவிக்காதவர்கள்; தந்தையின் மனப்போக்கை அறிந்தவளாய், தான் விரும்பியவனை விரும்பாதது போல் நடந்து, தன் காரியத்தைச் சாதித்துச் கொள்கிறாள். உமாவோ, தன் காதலனையே கணவனாக அடைய வேண்டுமென்பதற்காகத் தன்னைப் புலியிடமிருந்து காப்பாற்றிய வீரமிக்க இளைஞன் எனக் காதலனைப் பற்றிப் பொய் கூறி, அவனை மணந்து கொள்ளத் தந்தையிடம் சம்மதம் பெற்றுவிடுகிறாள். இவர்கள் இருவரது செயல்கள் வாயிலாக, மாலினி, உமா போன்ற பெண்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அமைதியான முறையில் தீர்வு கண்டு எளிதில் அவற்றினின்று விடுபட்டு விடுவார்கள் என ஆசிரியர் உணர்த்தியுள்ளார். புதுமைப் பெண்கள் ‘வாழப் பிறந்தவன் என்ற கதையில் வரும் கேதாரி, சொக்கி கதையில் வரும் சொக்கி, சித்தப்பா எனுங் கதையில் இடம் பெறம் நீலா ஆகிய மூவரும் வாழ்க்கையை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் கொண்டவர்கள். எதிர்க்கின்ற துணிச்சல் மிக்கவர்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இருளப்பன் மகள் கேதாரி வறுமையைப் போக்க வயலில் பாடுபடும் இளம்பெண். தன் திருமணத்திற்குப் பணம் கேட்டு முதலாளியிடம் அவமானப்பட்டுக் குறுகிப்போன தந்தையின் சார்பில் முதலாளி மகனிடம், துணிச்சலாகப் பேசுகிறாள். ‘என்னமோ, உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உசிரு இருக்க வேணுமில்லே? அதுக்காவ சம்பளம் கொடுக்கறிங்க? நாங்க வாழவா சம்பளம் கொடுக்கிறீங்க? என்று அவள் கேட்கும் கேள்வி சுரண்டும் வர்க்கத்தினருக்குக் கொடுக்கும் சாட்டையடியாக விழுகிறது. பாடுபடும் ஏழைகள் மீது முதலாளிக்கு அன்பு இருக்க வேண்டும் என்று கூறும் கேதாரி மானத்தோடு காலந்தள்ள விரும்பும் பெண்ணாகப் படைக்கப்பட்டு இருக்கிறாள்